குப்பைமேட்டில் இருப்பவரையும் குபேரராக வாழ வைக்கும் குபேர பிரதோஷம்! பிரதோசத்தில் குபேர வழிபாடு!

Kubera Pradosham Aani Thirumanjanam : இந்த ஆனி மாதத்தில் வரும் பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்தது, சிவனுக்கு ஆனி திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது என்றால், புதன்கிழமையன்று வரும் பிரதோஷத்தில் குபேரனை வணங்கினால் பணம் வந்து குவியும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 3, 2024, 09:51 AM IST
  • புதன்கிழமையன்று வரும் பிரதோஷ நாள்
  • சிவனின் தோழர் குபேரர்
  • பிரதோஷ நாளில் குபேரர் வழிபாடு
குப்பைமேட்டில் இருப்பவரையும் குபேரராக வாழ வைக்கும் குபேர பிரதோஷம்! பிரதோசத்தில் குபேர வழிபாடு! title=

Pradosham : சிவனின் தோழர் என்று சொல்லப்படும் குபேரர் சிவசகா என்ற பெயர் பெற்றவர். ஏனென்றால் சிவபெருமானைக் குறித்து 800 ஆண்டுகள் தவம் இருந்து சிவனுடைய நட்பைப் பெற்றவர் குபேரர். பிரம்மனை நோக்கித் தவமிருந்த குபேரர், வடக்கு திக்கின் பாலனாக, செல்வங்களின் அதிபதியாகவும் வரம் பெற்றார்.

சிவபக்தர் குபேரர்

குபேரர் தீவிரமான சிவ பக்தர், அவர் சிவபெருமானை நினைத்து தவம் செய்து இந்த செல்வத்துக்கு அதிபதியானார். இந்தப் பதவியை சிவபெருமான் குபேரருக்கு அளித்த நாள் புதன்கிழமை நாளாகும். அதனால் தான் புதன்கிழமையில் வரக்கூடிய பிரதோஷத்தை குபேர பிரதோஷம் என்று சொல்வார்கள்.

புதன் கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவபெருமானை விரதம் இருந்து வழிபடுபவர்கள் வழக்கம்போலவே போல வழிபடலாம். மாலை நேரத்தில் பிரதோஷ காலத்தில் ஆலயம் சென்று வழிபாடு செய்யலாம். அந்த சமயத்தில் குபேரரையும் நினைத்து வணங்கவும்.

விரதம் இருப்பதுடன் பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடனும் வறுமையும் நீங்கி செல்வம் வந்து சேரும். அத்துடன் பிரதோஷ நாளில் எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் என ஏதேனும் ஒரு நைவேத்தியத்தை சிவனுக்குப் படைத்தால், வாழ்வில் ஏற்படும் தடைகள் நீங்கும்.  

மேலும் படிக்க | Rasipalan: குரோதி ஆண்டு ஆனி மாதம் 19ம் நாள் புதன் கிழமை ஜூலை 3 ராசிபலன்கள் அதிர்ஷ்ட ராசிகள்!

குபேர பிரதோஷம் சிறப்புகள்

சிவனுக்கு உரிய பிரதோஷ விரதம் மிகவும் விசேஷமானது. அதிலும் இன்று புதன்கிழமையோடு வந்திருக்கும் குபேர பிரதோஷ தினத்தின் பிரதோஷ வேளையில் குபேரர் வழிபாடு மிகவும் பலன் அளிப்பது, வறியவரையும் குபேரராக வாழ வைப்பது. பிரதோஷ தினத்தில் நாள் முழுவதும் சிவபெருமானை நினைத்து அவருடைய நாமத்தை சொல்லி வணங்குவதே செல்வ வளத்தைக் கொடுக்கும். அதிலும், புதன்கிழமை நாளில் வந்திருக்கும் புதன் பிரதோஷத்தன்று செய்யும் வழிபாடுகள் பலமடங்கு பலனைத் தரும்.

புதன் கிழமையில் வரும் பிரதோஷ தினத்தை குபேர பிரதோஷம் என்றும் சொல்வதுண்டு. இன்றைய தினத்தில் சிவபெருமானையும் குபேரரையும் ஒரு சேர நினைத்து வணங்கும் போது, செல்வங்கள் நம்மை வந்தடையும், நிம்மதியாக வாழ முடியும் என்று சொல்லப்படுகிறது.

வீட்டில் இருந்து பிரதோஷ வழிபாடு

பிரதோஷ வழிபாட்டை வீட்டிலிருந்து செய்பவர்கள், மாலையில் பிரதோஷ வேளையில் சிவபெருமானை நினைத்து வழிபாடு செய்யலாம். வெற்றிலையில் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்த பிரகு, சிவலிங்கம் போன்ற மற்றொரு உருவத்தையும் மஞ்சளால் பிடித்து வைத்து கொள்ளவும்.

புதன்கிழமை என்பதால், அன்றைய நாளுக்குரிய தானியமான பச்சைப் பயிரை வைத்து வணங்குவது சிறப்பு. மஞ்சளால் பிடித்து வைத்த சிவலிங்கத்தை சுற்றிலும் பச்சைப்பயிறு வைக்கவும். சிவபெருமானுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், விபூதி, வில்வம் போன்றவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும்.

ஓம் நமசிவய என்ற மந்திரத்தை சொல்லி சிவனை வணங்கவும். மாலை வேளையில் பூஜை எல்லாம் முடிந்த பிறகு, செல்வ நிலை உயர அருள் புரிய வேண்டும் என்று வேண்டிக் கொள்வது நல்ல பலன் தரும். பிரதோஷ தினத்தில் செய்யக்கூடிய இந்த வழிபாடு நம் பாவங்களை தீர்த்து புண்ணியத்தை தருவதுடன் வாழ்க்கையின் செல்வத்தை அதிகரிக்கும்.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல்கள், பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது)

மேலும் படிக்க | ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News