ஐபிஎல் லீக் போல் தமிழகத்தில் நடைபெறும் டிஎன்பிஎல் கிரிக்கெட் லீக் 20 ஓவர் போட்டிகள் தொடங்கியுள்ளன. இதில் முதல் போட்டியில் சேப்பாக் கில்லீஸ் மற்றும் நெல்லை கிங்ஸ் அணிகள் மோதின. பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இப்போட்டியின் சூப்பர் ஓவரில் நெல்லை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. முதல் போட்டியே சூப்பர் ஓவரில் தொடங்கியது டிஎன்பிஎல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதுமட்டுமில்லாமல் சர்ச்சையும் இப்போட்டியில் தொடங்கியுள்ளது. இரண்டாவது பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் பேட்ஸ்மேனை, நெல்லை வீரர் பாபா அப்ராஜித் மன்கட் முறையில் அவுட்டாக்கியது சர்ச்சையாகியுள்ளது.
மேலும் படிக்க | பும்ரா பந்துவீச்சில் அடி வாங்கிய ரோகித் சர்மா - வீடியோ
முதலில் பேட்டிங் செய்த நெல்லை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 184 ரன்களை குவித்தது. சூர்யபிரகாஷ் 62 ரன்களும், சஞ்சய் யாதவ் 87 ரன்களும் விளாசினார். இதனையடுத்து கடினமான வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் வாண வேடிக்கைகளை காட்டியது. இறுதிக் கட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டபோது, ஹரீஸ் குமார் 12 பந்துகளில் 26 ரன்கள் விளாசி ஆட்டத்தை டையில் முடித்தார். இதனையடுத்து சூப்பர் ஓவரில் சேப்பாக் கில்லீஸ் தோல்வியை தழுவியது.
Baba Aparajith run-out Narayan Jagadeesan for backing at the non-striker end in TNPL. pic.twitter.com/PPhMeI91tg
— Johns. (@CricCrazyJohns) June 24, 2022
முன்னதாக, சேப்பாக் கில்லீஸ் வீரர் ஜெகதீசனை, நெல்லை பவுலர் பாபா அப்ராஜித் மன்கட் முறையில் அவுட்டாக்கினார். 4வது ஓவர் வீசிக் கொண்டிருந்தபோது பந்துவீச்சாளர் முனையில் இருந்த ஜெகதீசன் பந்துவீசப்படுவதற்கு முன்பு கோட்டை விட்டு வெளியே சென்றார். ஒருமுறை எச்சரித்த பாபா அப்ராஜித், மற்றொரு முறை மன்கட் முறையில் அவுட்டாக்கி வெளியேற்றினார். ஐபிஎல் போட்டியில் பட்லரை மன்கட் முறையில் அவுட்டாக்கி பெரும் சர்ச்சையில் சிக்கினார் அஸ்வின். அப்போது, கடும் விமர்சனத்தை ஏற்படுத்தினாலும், கிரிக்கெட் விதிப்படி நடந்து கொண்டதை சுட்டிக்காட்டினார் அஸ்வின். இப்போது அதேபோன்றதொரு அவுட்டை செய்து வைரலாகியுள்ளார் பாபா அப்ராஜித்.
மேலும் படிக்க | ஜோ ரூட்டைப் போல கிரவுண்டில் பேட்டை நிறுத்தும் விராட் கோலி! - வைரல் வீடியோ!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR