Ind vs Eng: 5 போட்டிகள் கொண்ட T20I இந்திய அணி அறிவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சனிக்கிழமை அறிவித்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 20, 2021, 10:18 PM IST
Ind vs Eng: 5 போட்டிகள் கொண்ட T20I இந்திய அணி அறிவிப்பு title=

இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) சனிக்கிழமை அறிவித்தது.

சூர்யகுமார் யாதவ், ராகுல் தேவதியா, இஷாங்க் கிஷன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்றவர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. புவனேஷ்வர் குமார் உட்பட சிலர் காயம் காரணமாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணிக்குத் திரும்புகின்றனர்.

மார்ச் 12 முதல் தொடங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விராட் கோலி இந்திய அணியை வழிநடத்துவார். டி 20 ஐ தொடரின் அனைத்து போட்டிகளும் அகமதாபாதில் நடைபெறும். உலகின் மிகப்பெரிய மைதானமான சர்தார் படேல் மைதானத்தில் (Sardar Patel Stadium) நடைபெறும்.

Also Read | IPL சரித்திரத்திலேயே மிக அதிக விலைக்கு விற்கப்பட்ட Chris Morris சாதனை

டி 20 ஐ அணியில் சில புதிய முகங்கள் சேர்க்கப்பட்டாலும், சஞ்சு சாம்சன் மற்றும் மனிஷ் பாண்டே போன்றவர்கள் வாய்ப்பை தவறவிட்டனர். சில பருவங்களாக இந்திய உள்நாட்டு சுற்று மற்றும் ஐபிஎல் ஆகியவற்றில் அற்புதமான திறமையைக் காட்டிய சூர்யகுமார் யாதவுக்கு இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி 20 ஐ தொடருக்கான இந்திய அணியில் முதலில் சேர்க்கப்பட்ட வருண் சக்ரவர்த்திக்கு காயம் காரணமாக தொடரைத் தவறவிட்டவர், தற்போது இடம் பெற்றுள்ளார்.  

ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி, தீபக் சஹார், புவனேஷ்வர் குமார் மற்றும் டி நடராஜன் போன்றவர்கள் அணியில் இடம் பெற்றுள்ளனர். ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2020 இல் நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அக்சர் படேலும் டி 20 ஐ அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டி 20 தொடருக்கான இந்தியா அணி:
விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், ஹார்டிக், ரிஷாப் பந்த், இஷான் கிஷன்ஒய்  சாஹல், வருண் சக்ரவர்த்தி, ஆக்சர் படேல், டபிள்யூ சுந்தர், ஆர் தேவதியா, டி நடராஜன், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், நவ்தீப், ஷார்துல் தாக்கூர்.

Also Read | IPL 2021 auction: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இறுதிப் பட்டியல்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News