எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...!

IPL 2024 Latest News Updates: ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் தோல்வியடைந்து வெளியேறிய ஆர்சிபி அணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் முன்னாள் சிஎஸ்கே வீரர் பதிவிட்ட வீடியோ ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 23, 2024, 05:21 PM IST
  • ஆர்சிபி அணியிடம் வீழ்ந்து சிஎஸ்கே அணி தொடரில் இருந்து வெளியேறியது.
  • சிஎஸ்கே பிளே ஆப் வராதது இது மூன்றாவது முறையாகும்.
  • ஆர்சிபி நேற்று ராஜஸ்தானிடம் படுதோல்வியடைந்தது.
எங்க கிட்ட 5 கப் இருக்கு... ஆர்சிபியை கலாய்த்த முன்னாள் சிஎஸ்கே வீரர் - அவர் போட்ட வீடியோ இருக்கே...! title=

Chennai Super Kings: ஐபிஎல் தொடர் என்றாலே அது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் நெருக்கமானது எனலாம். அந்த வகையில், நடப்பு ஐபிஎல் தொடர் என்பது தோனியின் ஆட்டம், மும்பை இந்தியன்ஸில் ஏற்பட்ட குழப்பம், ஆர்சிபியின் எதிர்பார்க்காத எழுச்சி, சன்ரைசர்ஸ் மற்றும் கொல்கத்தா அணிகளின் அதிரடி ஆட்டங்கள் ஆகியவற்றால் இன்னும் நெருக்கமாகியிருக்கிறது எனலாம். அந்த வகையில், லீக் சுற்று முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு கொல்கத்தா, ஹைதராபாத், ராஜஸ்தான், பெங்களூரு ஆகிய அணிகள் தகுதிபெற்ற நிலையில், கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் வென்றதால் பெங்களூரு அணி அப்படியே வெளியேறியது. சென்னை சேப்பாக்கத்தில் நாளை நடைபெறும் குவாலிஃபயர் 2 போட்டியில் வெற்றி பெறுபவர் மே 26ஆம் தேதி அதே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுவார்கள். சென்னையில் போட்டிகள் நடப்பதால் இறுதிப்போட்டி இன்னும் சுவராஸ்யமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்து வரும் சூழலில், போட்டிக்கு வெளியேவும் அதைவிட சுவாரஸ்யமான மற்றும் பரபரப்பான விஷயங்கள் நடைபெற்று வருகிறது. 

சிஎஸ்கேவை கலாய்த்த ஆர்சிபி ரசிகர்கள்...

குறிப்பாக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் வராமல் தொடரில் இருந்து வெளியேறியது சிஎஸ்கே ரசிகர்கள் தாண்டி பலருக்கும் பெரும் அதிர்ச்சியை அளித்தது எனலாம். ஏனென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அது விளையாடிய 15 சீசன்களில் 12 முறை பிளே ஆப் வந்து, 10 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று, 5 முறை கோப்பையை வென்றுள்ளது. இந்த முறை கடைசி லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்து சிஎஸ்கே வெளியேறியது. இதனால், ஆர்சிபி ரசிகர்கள் கடந்த சனிக்கிழமை இரவில் இருந்து சிஎஸ்கேவையும், அதன் ரசிகர்களையும் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கலாய்த்து தள்ளினர்.

மேலும் படிக்க |ஆர்சிபியை வைத்து செய்யும் நெட்டிசன்ஸ்... உச்சக்கட்ட குஷியில் சிஎஸ்கே ரசிகர்கள் - 'மீம்ஸ் படையல்'

ஆர்சிபி தோல்வியை கொண்டாடும் சிஎஸ்கே ரசிகர்கள்...

அந்த வகையில், ஐபிஎல் எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணி ராஜஸ்தானிடம் தோல்வியடைந்து வெளியேறியதை அடுத்து சிஎஸ்கே ரசிகர்கள் தங்களின் பதிலடிகளை வழங்கி வருகின்றனர். அதுவும் ஒரு சிலரோ சிஎஸ்கே கோப்பையை வென்றபோது கூட இத்தனை மகிழ்ச்சியாக இருந்ததில்லை, ஆர்சிபியின் தோல்வி அவ்வளவு மகிழ்ச்சியை தருகிறது என பதிவிட்டிருந்தார். அந்தளவிற்கு சிஎஸ்கே ரசிகர்கள் ஆர்சிபியின் தோல்வியை கொண்டாடி வருகின்றனர்.

ராயுடு போட்ட வீடியோ

இந்நிலையில், இது ரசிகர்களிடம் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் இந்த களேபரத்தில் இறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பதி ராயுடு தொடர்ந்து ஆர்சிபி அணியை கலாய்த்து வருகிறார் எனலாம். அந்த வகையில், அவரின் இன்ஸ்டாகிராம் பதிவில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில் கடந்த 2023ஆம் ஆண்டு சிஎஸ்கே அணி கோப்பையை வென்ற பின்னர் பேருந்தில் வந்துகொண்டிருந்த போது ஜடேஜா மற்றும் ரஹானே ஆகியோர் சிஎஸ்கே 5 கோப்பைகளை வைத்திருப்பதாக சைகை மூலமும், பாடு பாடியும் தெரிவிப்பார்கள். அதனை இப்போதைய கேப்டன் ருத்ராஜ் கெய்க்வாட் ரசிப்பதையும் நாம் பார்க்க முடியும். இந்த வீடியோவை தற்போது பதிவேற்றிய ராயுடு அதில்,"5 முறை சாம்பியனிடம் இருந்து ஒரு அன்பான நினைவூட்டல்.சில நேரங்களில் ஒரு மென்மையான நினைவூட்டல் அவசியமாகிறது" என வாய் மூடி சிரிக்கும் எமோஜியுடன் பதிவிட்டுள்ளார். இதுதான் தற்போது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேலும் அந்த பதிவில் சிஎஸ்கே வீரர்களான தீபக் சஹார் மற்றும் பதிரானா ஆகியோரும் வாய்விட்டு சிரிக்கும் எமோஜிகளை கமெண்ட் செய்துள்ளனர். 

அடுத்த வருஷமும் வரணும்...

முன்னதாக ராயுடு ஆர்சிபி தோல்விக்கு பின்,"இன்று நீங்கள் ஆர்சிபி பற்றி பேசினால், ஆர்வமும் ஆக்ரோஷமான கொண்டாட்டங்களும் மட்டுமே உங்களுக்கு கோப்பைகளை வென்று தராது என்பதை இது உணர்த்துகிறது. நீங்கள் அதற்கு சரியாக திட்டமிட வேண்டும். பிளே ஆப் சுற்றுக்கு வந்துவிட்டாலே, ஐபிஎல் கோப்பையை நீங்கள் வென்றுவிட்டீர்கள் என அர்த்தமில்லை. அதே உணர்ச்சியுடன் தொடர்ந்து விளையாட வேண்டும். சிஎஸ்கேவை வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை வென்றதுவிட்டதுபோல் நீங்கள் நினைக்க வேண்டாம். அடுத்த வருடம் மீண்டும் ஒருமுறை நீங்கள் விளையாட வர வேண்டும்" என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க |இந்திய அணி பயிற்சியாளர் வாய்ப்பை உதறி தள்ளிய ரிக்கி பாண்டிங்... அவரே சொன்ன காரணம்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News