தோனியின் அறிவுரை தான் எனக்கு உதவியது: சிராஜ்!

ஐபிஎல் 2019க்கு பிறகு ட்ரோல்களில் இருந்து வெளியே வர எம்எஸ் தோனியின் அறிவுரை தான் உதவியது என்று சிராஜ் கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Feb 6, 2022, 12:47 PM IST
  • சிராஜ் ஏற்கனவே டெஸ்ட் அணியிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
  • இந்திய அணியில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த விளங்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.
தோனியின் அறிவுரை தான் எனக்கு உதவியது: சிராஜ்! title=

KKRக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தின் போது சிராஜின் மோசமான பவுலிங்கால் பல விதமான விமர்சனங்களுக்கு உள்ளானார்.  ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில், முகமது சிராஜ் இந்திய அணியில் மிகக் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தனது பெயரை நிலைநிறுத்தி உள்ளார். சிராஜ் ஏற்கனவே டெஸ்ட் அணியிலும் தனது இடத்தை உறுதிப்படுத்தியுள்ளார் மற்றும் இந்திய அணியில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த விளங்கும் வீரர்களில் ஒருவராக உள்ளார்.  

ALSO READ | தோனியை கலாய்த்த KKR! தக்க பதிலடி கொடுத்த ஜடேஜா!

இன்று தொடங்கும்  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான இந்தியாவின் ODI மற்றும் T20I அணிகளிலும் இடம்பெற்றுள்ளார்.  இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) 2020 பதிப்பில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார்.  அதன்பிறகு இந்திய கிரிக்கெட்டில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைப் பெற்றார், அந்த சீசனில் ஒன்பது ஆட்டங்களில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  2021 ஐபிஎல்-ல் 15 போட்டிகளில் வெறும் 6.78 என்ற எகானமி விகிதத்தில் பந்து வீசிய சிறப்பாக செயல்பட்டார்.   

இதன் காரணமாக சிராஜ் ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் இடம் பிடித்தார்.  மெல்போர்னில் தனது டெஸ்ட் கெரியரை தொடங்கிய இவர், அந்த தொடரில் மூன்று ஆட்டங்களில் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் பட்டியலில் முதல் இடம் பிடித்தார்.  தற்போது சிறப்பாக செயல்பட்டாலும் 2017-ல் சிராஜின் (Siraj) கிரிக்கெட் வாழ்க்கை சிறப்பாக தொடங்கவில்லை.  நியூசிலாந்திற்கு எதிரான டி20-ல் ரன்களை வாரிவழங்கி இருந்தார், பின்பு ஐபிஎல்-லும் இதே நிலை தொடர்ந்தது.   

siraj

மேலும் 2019 பதிப்பில் KKR க்கு எதிரான ஆட்டத்தில் சிராஜ் 2.2 ஓவர்களில் 0/36 ரன்களை விட்டுக்கொடுத்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இதனால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளானார்.  இது குறித்து சமீபத்தில் கூறிய சிராஜ், “2019-ல் KKR க்கு எதிரான போட்டிக்கு பிறகு நான் நிறைய விமர்சனங்களைப் பெற்றேன். கிரிக்கெட்டை விட்டுவிட்டு, ‘உன் அப்பாவுடன் ஆட்டோ ஓட்டச் செல்லுங்கள்’ என்று கூட மக்கள் என்னிடம் சொன்னார்கள். என்மீதே எனக்கு பல கருத்துகள் இருந்தன.  நான் முதலில் இந்தியாவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​தோனி என்னிடம் ஒரு விஷயம் சொன்னார்; 'யாருடைய பேச்சையும் கேட்காதே. இன்று நீங்கள் நன்றாக விளையாடுவீர்கள், எல்லோரும் உங்களைப் புகழ்வார்கள். நாளை, நீங்கள் மோசமாக செயல்பட்டால், அதே நபர்கள் உங்களை வீழ்த்துவார்கள். அதனால் ஒரு கருத்தையும் எடுக்காதே. அப்போது மக்கள் உன்னை மிகவும் ட்ரோல் செய்தது எனக்கு நினைவிருக்கிறது. அதே மக்கள் இப்போது உன்னை ‘சிறந்த பந்துவீச்சாளர்’ என்று அழைக்கிறார்கள்' என்று தோனி என்னிடம் கூறினார்.  இது எனக்கு மிகவும் தைரியத்தை கொடுத்தது.

siraj

நான் ஐபிஎல்லில் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, ​​என் வாழ்க்கை நன்றாக இருந்தது. என் அப்பா ஆட்டோ ஓட்டுவதை நிறுத்திவிட்டார், நாங்கள் ஒரு புதிய வீடு வாங்கினோம். வாழ்க்கையில் எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. அப்போது நான் கடினமாக உழைக்க மட்டுமே முயற்சித்தேன்” என்று சிராஜ் கூறினார்.

ALSO READ | கேப்டன் பதவி மேல் பேராசை இல்லாதவர் கோலி : அனுஷ்கா ஷர்மா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News