இந்தியன் பிரீமியர் லீக்கின் (IPL) வரவிருக்கும் பதிப்பிற்கான டைட்டில் ஸ்பான்சரின் பெயரை BCCI அறிவித்துவிட்டது. Dream 11 நிறுவனம் இவ்வாண்டின் IPL தொடரின் டைட்டில் ஸ்போன்சராக இருக்கும்.
சீன மொபைல் உற்பத்தியாளரான Vivo-வுடனான தன் ஒப்பந்தத்தை BCCI சமீபத்தில் நிறுத்தியது. 2018 ஆம் ஆண்டு BCCI, Vivo-வுடன் ஐந்து ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. Vivo-விடம் இருந்து BCCI-க்கு ரூ .440 கோடி வந்த நிலையில், Dream 11, வரவிருக்கும் IPL பதிப்பிற்கு BCCI-க்கு 222 கோடி செலுத்தும் என்று கூறப்பட்டுள்ளது. செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இந்த ஆண்டிறாக IPL விளையாட்டுகள் நடக்கவிருக்கின்றன.
Dream 11, BCCI-க்கு 222 கோடி ரூபாய் ஸ்பான்சர் கட்டணமாக அளிக்கும் என IPL தலைவர் பிரிஜேஷ் படேல் உறுதிப்படுத்தினார். இந்த டைட்டில் ஸ்பான்சருக்காக போட்டியிட்ட நிறுவனங்களில் மிக அதிக ஏலத் தொகையை Dream 11 முன்வைத்தது. இதைத் தொடர்ந்து Unacademy மற்றும் Byju’s ஆகிய நிறுவனங்களின் ஏலத் தொகை இருந்தன.
போட்டிகள் துவங்க சில நாட்களே இருந்த நிலையில், சரியான ஒரு டைட்டில் ஸ்பான்சரை நியமிப்பது BCCI-க்கு ஒரு சவாலாகவே இருந்தது. எனினும் உலகளவில் பிரபலமாகியுள்ள IPL-ன் டைட்டில் ஸ்பான்சராக பல நிறுவனங்களுகிடையே பலத்த போட்டி நிலவியது.
ALSO READ: IPL 2020: முதன்மை ஸ்பான்சராக மும்முரம் காட்டும் பாபா ராம்தேவின் பதஞ்சலி!!
2020 ஆம் ஆண்டிற்கான ஒப்பந்தம் 5 மாதங்கள் என்ற மிகக் குறுகிய காலகட்டத்திற்கானது. ஆகையால் Vivo-விடமிருந்து BCCI பெற்ற தொகையில் பாதி அளவில் இந்த ஒப்பந்தத்தை முடிக்க வேண்டிய கட்டாயத்திலும் BCCI இருந்தது.
இந்த ஒப்பந்தம் எட்டு உரிமையாளர்களுக்கும் ஒரு பெரிய அடியாக வந்துள்ளது. ஏனெனில் BCCI, டைட்டில் ஸ்பான்சரிடமிருந்து வரும் தொகையில் 50 சதவிகிதத்தை எட்டு அணி உரிமையாளர்களிடையே பகிர்ந்து கொள்கிறது.
IPL 2019 இல், எட்டு உரிமையாளர்களும் தலா 55 கோடி ரூபாய் கிடைத்தது. IPL 2020-ல் அணி உரிமையாளர்களுக்கு தலா ரூ 27.75 கோடி மட்டுமே கிடைக்கும்.
இதற்கிடையில், கொரோனா தொற்றால் மனதளவில் விரக்தியடைந்துள்ள மக்களும் கிரிக்கெட் ரசிகர்களும் IPL-க்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ALSO READ: IPL 2020 டைட்டல் ஸ்பான்சர் இன்று அறிவிப்பு, எந்த நிறுவனக்கு வாய்ப்பு அதிகம்?