ஐபிஎல் போட்டிக்கு இடையில் ஓய்வு பெற போகும் சிஎஸ்கே ஸ்டார் வீரர்!

சுரேஷ் ரெய்னா அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.   

Written by - RK Spark | Last Updated : Apr 1, 2022, 04:14 PM IST
  • ஐபிஎல் 2022 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
  • சி.எஸ்.கே. அணி இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்தது.
  • சுரேஷ் ரெய்னா ஐபிஎல் ஏலத்தில் விலை போகவில்லை.
ஐபிஎல் போட்டிக்கு இடையில் ஓய்வு பெற போகும் சிஎஸ்கே ஸ்டார் வீரர்! title=

இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 தொடங்குவதற்கு முன், இந்திய அணியின் முன்னாள் கேப்டனான எம்எஸ் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவை வேறு வழியின்றி தோனி அறிவித்து இருந்தார்.  தோனி அறிவித்த சில மணி நேரங்களில் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ஐபிஎல் 2022க்கு முன்னதாக சென்னை அணியின் கேப்டன் பொறுப்பை தோனி, ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்தார்.

sports

மேலும் படிக்க | கொல்கத்தா அணியை அலறவிட்ட ஆர்சிபி அணியின் இளம் வீரர் ஷபாஸ் அகமது யார்?

சுரேஷ் ரெய்னா மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படுகிறார், ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஐபிஎல் 2022க்கான மெகா ஏலத்தில் அவர் விற்கப்படாமல் போனார். சென்னையை அணியும் ரெய்னாவை அணியில் எடுக்காமல் போனது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  தற்போது ரெய்னா ஸ்டார்ட் ஸ்போர்ட்ஸ் ஹிந்தி மொழிக்கு வர்ணனையாளராக இருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியாக உள்ளது.  சுரேஷ் ரெய்னா இதுவரை நடைபெற்ற ஐபிஎல் 2022 போட்டிகளில் வர்ணனையாளராக இருந்து வருகிறார். மேலும் போட்டியின் இறுதி வரை வர்ணனையை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரெய்னா இன்னும் கிரிக்கெட்டில் இருந்து முழுவதுமாக ஓய்வு பெறவில்லை.  அவர் வெளிநாட்டு லீக்குகளில் பங்கேற்பது குறித்து சில தகவல்கள் உள்ளன. ரெய்னாவுக்கு இப்போது 35 வயதாகிறது, மேலும் இந்தியன் பிரீமியர் லீக்கில் அவருக்கு மேலும் வாய்ப்பு கிடைக்கும் என்று உறுதியாக சொல்ல முடியவில்லை.  ​​இதனால் ரெய்னா கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களுக்கும் 'குட்பை' சொல்லக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | லக்னோ அணியை வீழ்த்த CSK அணிக்குள் என்டிரியாகும் புதிய வீரர் - தோனியின் மாஸ் பிளான்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News