ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இருந்து இந்திய அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தான் மற்றும் இலங்கையிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி தொடரில் இருந்து வெளியேறியது. கோப்பை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி, தோல்வியை தழுவியது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கேப்டன் ரோகித் சர்மாவையும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டையும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அணித் தேர்வு மற்றும் முக்கியமான கட்டங்களில் எடுத்த முடிவு இந்திய அணிக்கு பெரும் பாதகமாக அமைந்ததாக குற்றம்சாட்டியுள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரை வீசிய புவனேஷ்வர் குமார் 19 ரன்களை விட்டுக் கொடுத்து அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவ முக்கிய காரணமாக மாறினார். ரன்களை கட்டுப்படுத்த வேண்டிய முக்கியமான பொறுப்புடன் வீசிய வேண்டிய ஓவரை சொதப்பினார். இதேபோல் இலங்கை அணிக்கு எதிரான போட்டியிலும் 19வது ஓவரை சொதப்பினார். இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டிய நிலையில, புவனேஷ்வர் குமார் ஒருவரின் சொதப்பலான ஆட்டத்தால் இந்திய அணி தொடரில் இருந்து வெளியேற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது.
மேலும் படிக்க | இந்த பிளேயர் இருந்திருந்தால் இந்திய அணி வெற்றி பெற்றிருக்கும்
பாகிஸ்தான் அணிக்கு எதிராக புவனேஷ்வர் குமார் சொதப்பிய நிலையில், மீண்டும் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் 19வது ஓவரை புவனேஷ்வர் குமாருக்கு கொடுத்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள ரசிகர்கள், ஃபார்மில் இருக்கும் தினேஷ் கார்த்திக்கை அணியில் சேர்க்காமல் சொதப்பலாக ஆடிவரும் ரிஷப் பன்டுக்கு வாய்ப்பு கொடுப்பது குறித்தும் சாடினர். இத்தகைய விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் ரோகன் கவாஸ்கர், ரோகித் சர்மா புவனேஷ்வர் குமாருக்கு ஓவர் கொடுத்ததை குறையாக கூற முடியாது எனத் தெரிவித்துள்ளார். அனுபவம் மிக்க புவனேஷ்வர் குமார் பல போட்டிகளில் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடியுள்ளார். அதனால் ஒன்றிரண்டு போட்டிகளை வைத்து அவரையும், கேப்டன் ரோகித் சர்மாவின் கேப்டன்சி குறித்தும் மதிப்பிடுவது சரியாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | Asia Cup2022: விராட் கோலிக்காக காத்திருக்கும் சாதனை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ