IPL 2020: CSK அணியுடன் வெள்ளியன்று துபாய் செல்லமாட்டார் ஹர்பஜன் சிங்!! விவரம் உள்ளே!!

IPL 2020 போட்டிகளுக்காக CSK அணி வெள்ளியன்று UAE-க்கு கிளம்பும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 20, 2020, 12:24 PM IST
  • கொரோனா தொற்று காரணமாக இவ்வாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL), UAE-ல் விளையாடப்படவுள்ளது.
  • தோனி மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்கு வந்தனர்.
  • அனைத்து CSK வீரர்களுக்கும் COVID-19 சோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன.
IPL 2020: CSK அணியுடன் வெள்ளியன்று துபாய் செல்லமாட்டார் ஹர்பஜன் சிங்!! விவரம் உள்ளே!! title=

கொரோனா தொற்று (Corona Virus) காரணமாக இவ்வாண்டு இந்தியன் பிரீமியர் லீக் (IPL), ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) விளையாடப்படவுள்ளது. இந்நிலையில், அனைத்து அணிகளும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, UAE-க்கு புறப்படவும் தயாராகி வருகின்றன. CSK அணி வெள்ளியன்று UAE-க்கு கிளம்பும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களில் ஒருவரான மூத்த இந்திய ஆஃப்-ஸ்பின்னர் ஹர்பஜன் சிங்வ்(Harbhajan Singh), வெள்ளிக்கிழமை CSK அணியின் மற்றவர்களுடன் துபாய்க்கு செல்ல மாட்டார் என்று கூறப்பட்டுள்ளது.  எம்.எஸ். தோனி (MS Dhoni) தலைமையிலான CSK அணி, தற்போது சென்னையில் உள்ளது. அங்கு CSK பயிற்சி முகாமில் முழுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

ஹர்பஜனின் தாயார் உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். இதன் விளைவாக அவர் வெள்ளிக்கிழமை அணியுடன் UAE-க்கு செல்ல மாட்டார் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இரண்டு வாரங்களுக்குப் பிறகு அவர் அணியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தோனி மற்றும் அணியின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை மாலை சென்னைக்கு வந்தனர். எனினும், ஹர்பஜன் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோர் வரவில்லை. CSK-வின் பயிற்சி முகாம் சனிக்கிழமையன்று சென்னையில் துவங்கியது.

புதன்கிழமை தாக்கூர் அணியில் பயிற்சிக்காக இணைந்துள்ள நிலையில் ​​ஜடேஜா இன்று பயிற்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட குறுகிய பயிற்சி முகாம் வியாழக்கிழமை முடிவடையும்.

ALSO READ: IPL 2020: விராட், தோனி மற்றும் ரோஹித்....யாருக்கு அதிகமான சம்பளம்? வெளியான சுவாரசிய தகவல்

பயிற்சி முகாமின் ஒரு பகுதியாக, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (TNCA) வீரர்களுக்காக இரண்டு பிட்ச்களை தயார் செய்திருந்தது.

அனைத்து CSK வீரர்களுக்கும் COVID-19 சோதனை செய்யப்பட்டு பரிசோதனை முடிவுகள் எதிர்மறையாக வந்துள்ளன. இது CSK நிர்வாகத்திற்கு மிகப்பெரிய நிம்மதியை அளித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாட திட்டமிடப்பட்டுள்ள IPL 2020 க்கான வழிகாட்டுதல்களின்படி - துபாய் புறப்படுவதற்கு முன்னர் அனைத்து வீரர்களுக்கும் இரண்டு முறை COVID-19  சோதனைகளை நடத்த அனைத்து உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ALSO READ: ஆட்ட நாயகன் தோனிக்கும் ஐடி கம்பெனிக்கும் இவ்வளவு ஒற்றுமையா...!!!

Trending News