ENG vs NED Match Highlights: இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் நடப்பு ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிக்கு தகுதிபெற்றுவிட்டன. இதில், வரும் நவ. 16ஆம் தேதி நடைபெறும் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா - ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.
அந்த வகையில், இந்திய அணி விளையாடும் முதல் அரையிறுதியில் பங்குபெறும் அணி எது என்ற கேள்விதான் இந்த லீக் சுற்றை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. அந்த இடத்திற்கு யார் வரப்போகிறார்கள் என்பதற்கு மூன்று போட்டிகளின் முடிவுக்கு நாம் காத்திருக்க வேண்டும். அதாவது, நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அந்த இடத்திற்கு கடுமையாக போட்டியிடுகிறது.
இதில் நியூசிலாந்து அணி அதன் கடைசி லீக் போட்டியை நாளை இலங்கை உடனும், ஆப்கானிஸ்தான் அதன் கடைசி லீக் போட்டியை நாளை மறுநாள் தென்னாப்பிரிக்கா உடனும் மோத உள்ளன. இந்த இரண்டு போட்டிகளின் முடிவுகள் ஒருபுறம் இருக்க பாகிஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்துடன் அதன் கடைசி லீக் போட்டி வரும் நவ.11ஆம் தேதி மோதுகிறது. எனவே, இதில் யார் யார் அதிக நெட் ரன் ரேட்களில் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் அரையிறுதியில் இந்தியா உடன் மோதுவார்கள்.
மேலும் படிக்க | விளையாட வந்தால் அவர் மீது கற்கள் வீசப்படும்... ஏஞ்சலோ மேத்யூஸின் அண்ணன் ஓபன் டாக்!
ஆனால், நியூசிலாந்து அணிக்கே தற்போது இதில் அதிக வாய்ப்புள்ளது. நாளை இலங்கை அணியை நல்ல ரன் ரேட்டில் ஜெயிக்க வேண்டும். இலங்கை நியூசிலாந்தை அவ்வளவு எளிதாக வெற்றியடைய விடாது. நியூசிலாந்து முதல் 4 போட்டிகளில் வெற்றி பெற்றாலும், கடந்த 4 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது. அவர்களின் முக்கிய வீரர்களான மேட் ஹென்றி, பெர்குசன் ஆகியோர் காயத்தில் சிக்கியதும் இதற்கு காரணமாகும். மறுபுறம் ஆப்கானிஸ்தானுக்கு வாய்ப்பு மிக மிக குறைவாக உள்ளது, நேற்றைய ஆஸ்திரேலிய போட்டிக்கு பின்.
இதில் கூடுதல் பலன் பாகிஸ்தானுக்குதான். இந்த இரண்டு போட்டிகளின் முடிவை வைத்து அவர்கள் தங்களின் அணுகுமுறையை திட்டமிட்டுக்கொள்ளலாம். ஆனால், அதுவும் அவர்களுக்கு எளிதாக இருக்காது. இங்கிலாந்து அணி அவர்களை வீழ்த்தி, சாம்பியன்ஸ் டிராபிக்கு தகுதிபெறும் நோக்கில் விளையாடும்.
இன்றைய போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்து 339 ரன்களை குவித்தது. பென் ஸ்டோக்ஸ் 108 ரன்களையும், மலான் 87 ரன்களையும் அடித்தனர். நெதர்லாந்து பந்துவீச்சில் பாஸ் டி லீட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தொடர்ந்து, நெதர்லாந்து அணி பேட்டிங் செய்து 179 ரன்களுக்கு ஆல்-அவுட்டாக இங்கிலாந்து அணி 160 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நெதர்லாந்து அணியில் அதிகபட்சமாக தேஜா 41, கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் 38 ரன்களையும் அடித்தனர்.
இங்கிலாந்து அணி இந்த வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்திற்கு முன்னேறியது. இதனால், வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து 8ஆவது, 9ஆவது, 10ஆவது இடத்தில் உள்ளனர். இங்கிலாந்தின் இந்த திடீர் ஃபார்மால் பாகிஸ்தான் முகாம் கடும் கலக்கத்தில் இருக்கும்.
மேலும் படிக்க | அரையிறுதியில் இந்தியா - பாகிஸ்தான்? உலக கோப்பையில் புதிய ட்விஸ்ட்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ