வரும் 2020-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள t20 உலக கோப்பைக்கு நேரடியாக தேர்வாகியுள்ள 8 கிரிக்கெட் அணிகளை ICC அறிவித்துள்ளது!
ICC t20 ஆடவர் உலக கோப்பை போட்டிகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைப்பெற்று வருகிறது. முன்னதாக கடந்த 2016-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைப்பெற்ற t20 உலக கோப்பை போட்டிக்கு பின்னர், 2018-ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் அடுத்த t20 உலக கோப்பை தொடரை நடத்த ICC திட்டமிட்டது.
ஆனால் 2017-ஆம் ஆண்டு நடைப்பெற்ற ICC சாம்பியன்ஸ் ட்ரோப்பி போட்டிக்கு பின்னர், அடுத்த t20 உலக கோப்பை தொடர் 2020-ஆம் ஆண்டு t20 உலக கோப்பை நடைப்பெறும் எனவும், இப்போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் எனவும் ICC அறிவித்தது.
BREAKING: The sides that have qualified directly for the ICC Men's #T20WorldCup 2020 have been confirmed.
Details https://t.co/vauT8EeL3V pic.twitter.com/523BZOEj0y
— ICC (@ICC) January 1, 2019
இந்நிலையில் தற்போது இத்தொடரில் விளையாட நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 10 அணிகளின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி தொடரை நடத்தும் ஆஸ்திரேலியா அணியை தவிர, ICC தரவரிசையில் அடிப்படையில் மீதமுள்ள 9 அணிகள் நேரடியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்த 10 அணிகளில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் சூப்பர் 12 போட்டிகளில் நேரடியாக விளையாடுவர், மீதமுள்ள இரண்டு அணி தேர்வு சுற்றில் பங்கேற்று வரும் அணிகளுடன் விளையாடி இறுதி கட்டத்தை நோக்கி பயணிப்பர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முன்னாள் சாம்பியனான இலங்கை, வங்கதேச அணிகள் குவாளிப்பையர் 6-ல் பங்கேற்று சூப்பர் 12-க்கு முன்னேறுவர். இப்போட்டிகள் வரும் அக்டோபர் 18 - நவம்பர் 15 வரை நடைப்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ICC அணிகள் தரவரிசை (t20)
- பாக்கிஸ்தான்
- இந்தியா
- இங்கிலாந்து
- ஆஸ்திரேலியா
- தென்னாபிரிக்கா
- நீயூசிலாந்து
- மேற்கிந்திய தீவு
- அப்கானிஸ்தான்
- இலங்கை
- வங்கதேசம்.