IND vs ENG: வருத்தம் தெரிவித்த ரோகித் சர்மா... சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்தது..!

இங்கிலாந்து அணி வீரர் சோயிப் பஷீருக்கு விசா கிடைக்காததற்கு, அந்த அணியினர் அதிருப்தி தெரிவித்தனர். இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவும் வருத்தம் தெரிவித்த நிலையில், அவருக்கு விசா கிடைத்துள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 25, 2024, 09:19 AM IST
  • இங்கிலாந்து வீரருக்கு விசா மறுப்பு
  • அதிருப்தி தெரிவித்த பென் ஸ்டோக்ஸ்
  • இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வருத்தம்
IND vs ENG: வருத்தம் தெரிவித்த ரோகித் சர்மா... சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்தது..! title=

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகளின் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கின்றன. இந்த டெஸ்ட் போட்டி இன்று (ஜனவரி 25) தொடங்குகிறது. ஹைதராபாத்தில் நடக்கும் போட்டிக்கு முன்பாக இங்கிலாந்து அணி திடீரென அதிருப்தியை தெரிவித்தது. ஏனென்றால், முதல் டெஸ்ட் போட்டிக்கு விண்ணப்பித்திருந்த இங்கிலாந்து அணியின் பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த வீரர் சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைக்கவில்லை. இதனால் அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனது.

இதனால் அதிருப்தி அடைந்த இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "இந்தியா அரசு விசா வழங்காதது ஏமாற்றம் அளிக்கிறது. சோயப் பஷீருக்கு விசா கிடைக்க வேண்டும் என்று நாங்கள் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்" என்று கூறியிருந்தார். இந்நிலையில், சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்துள்ளது. அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வருவார் என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | டென்னிஸ் வரலாற்றில் இந்தியரின் மகத்தான சாதனை... 43 வயதிலும் மிரட்டும் போபண்ணா! 

இது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சோயப் பஷீருக்கு இந்திய விசா கிடைத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் இந்த வார இறுதியில் இந்தியாவுக்கு வருவார். அவர் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் போனதற்கு நாங்கள் வருந்துகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.  இந்திய அரசு மீது வைக்கப்படும் இந்த குற்றச்சாட்டுகள் பற்றி இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அவர், "சோயப் பஷீருக்காக நான் வருந்துகிறேன். அநேகமாக அவர் முதல் முறையாக இந்தியாவுக்கு வருகிறார் என்று நினைக்கிறேன். ஆனால், அவருக்கு விஷா கொடுப்பதற்கு நான் ஒன்றும் விசா அலுவலகத்தில் அமர்ந்து இருக்கவில்லை. விரைவில் அவர் இந்தியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி, நல்ல நிலையில் இருந்தாலும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றாக வேண்டிய நிலையில் இருக்கிறது.  இந்த தொடரில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு பிரகாசமாகும். 

மேலும் படிக்க | IND vs ENG: இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்... நேரலையில் எப்போது, எங்கு பார்ப்பது? - முழு விவரம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News