IPL 2020 ஏலத்திற்கான 971 வீரர்களின் அசல் பட்டியல் தற்போது 332-ஆக குறைக்கப்பட்டுள்ளது என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தியன் பிரீமியர் லீக் (IPL), எதிர்வரும் டிசம்பர் 19-ஆம் தேதி கொல்கத்தாவில் மற்றொரு பம்பர் ஏலத்திற்கு தயாராகி வருகிறது. 215 சர்வதேச வீரர்களுடன் சேர்த்து சுமார் 971 பேர் இந்த ஏலத்திற்கு பதிவு செய்துள்ளனர். IPL 2020 ஏலத்தில் 200-க்கும் மேற்பட்ட சர்வதேச வீரர்கள் இடம்பெற்று இருப்பது, இந்த IPL தொடர் நடைப்பெற்ற தொடர்களில் மிகப்பெரிய தொடராக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இந்த 971 வீரர்களின் பெயர் கொண்ட பட்டியல், 332 வீரர்களின் பெயர் கொண்ட பட்டியலாக வடிகட்டப்பட்டுள்ளது. மேலும் அசல் பட்டியலில் இல்லாத 24 புதிய வீரர்களும் இந்த புதிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
Click Here - IPL 2020 தொடர்பான செய்திகளை படிக்க...
அவர்களில் சர்வதேச டி20 தொடரில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஒரு பகுதியாக இருந்த கெஸ்ரிக் வில்லியம்ஸ், ஆஸ்திரேலியர்களான டான் கிறிஸ்டியன் மற்றும் ஆடம் ஜாம்பா மற்றும் பங்களாதேஷின் முஷ்பிகுர் ரஹீம் ஆகியோர் அடங்குவர்.
ஆல்ரவுண்டர்கள், விக்கெட் கீப்பர்கள், வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு செல்வதற்கு முன்னதாக பேட்ஸ்மேன்களுடன் ஏலம் தொடங்கும் என்று அறிக்கை கூறுகிறது.
இந்த 332 வீரர்கள் கொண்ட பட்டியிலில் இருந்து 73 வீரர்கள் மட்டும் எதிர்வரும் IPL 2020 தொடருக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Click Here - IPL 2020 தொடர்பான செய்திகளை படிக்க...
க்ளென் மேக்ஸ்வெல், கிறிஸ் லின், பாட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், டேல் ஸ்டெய்ன் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் ஆகியோர் அடிப்படை விலையை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ராபின் உத்தப்பா மற்றும் ஜெய்தேவ் உனட்கட் ஆகியோர் மொத்தம் 19 இந்திய வீரர்களில் உள்ளனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கைவிட்ட உத்தப்பாவின் அடிப்படை விலை ரூ. 1.5 கோடி எனவும், உனட்கட்டின் அடிப்படை விலை ரூ.1 கோடி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் ஏலத்தில் இருந்து விலகினார். முன்னதாக உலகக் கோப்பை மற்றும் ஆஷஸில் கவனம் செலுத்துவதற்காக அவர் IPL 2019-ல் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
Click Here - IPL 2020 தொடர்பான செய்திகளை படிக்க...
அசல் பட்டியல் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டிய சில தகவல்கள்...
- பதிவு செய்த 971 வீரர்களில் 73 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- இந்திய கிரிக்கெட் அணியின் சர்வேத போட்டியில் பங்கேற்ற வீரர்கள் 19 பேர்.
- சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இந்தியர்கள் 634 பேர்.
- குறைந்தது 1 IPL போட்டியில் விளையாடி (ம) சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத இந்திய வீரர்கள் 60 பேர்.
- சர்வதேச போட்டிகளில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் 160 பேர்
- சர்வதேச போட்டிகளில் பங்கேற்காத வெளிநாட்டு வீரர்கள் 60 பேர்.
- இணை வீரர்கள் இரண்டு பேர்.