COVID-க்கு ஆளான தல தோனியின் பெற்றோர் எப்படி உள்ளனர்? இதோ அப்டேட்

மருத்துவமனையின் கூற்றுப்படி, தோனியின் பெற்றோரின் நிலை சீராக உள்ளது. அவர்களது ஆக்ஸிஜன் அளவும் நன்றாக உள்ளது, தொற்று நுரையீரலை எட்டவில்லை.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 22, 2021, 04:25 PM IST
  • எம்.எஸ் தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
  • தோனிக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருந்து உதவுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது-ஸ்டீஃபன் ஃப்ளெமிங்.
  • தோனியின் பெற்றோரின் நிலை சீராக உள்ளது-மருத்துவமனை.
COVID-க்கு ஆளான தல தோனியின் பெற்றோர் எப்படி உள்ளனர்? இதோ அப்டேட் title=

மும்பை: சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ் தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர். இந்த நிலையில் அவர்களைப் பற்றிய ஒரு புதுப்பிப்பு வந்துள்ளது. 

தோனியின் பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட பிறகு, அவர்கள் ராஞ்சியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், CSK அணியின் கேப்டன் தோனியின் பெற்றோரது உடல்நிலையை CSK அணி நிர்வாகமும் தொடர்ந்து கண்காணித்து வருவதாக அணியின் பயிற்சியாளர் ஸ்டீஃபன் ஃப்ளெமிங் தெரிவித்தார். 

புதன்கிழமை கொல்கத்தா நைட் ரைடர்சுக்கு எதிராக சென்னை அணி அடைந்த வெற்றிக்கு பிறகு பேசிய ஃப்ளெமிங், அவர்களது உடல்நிலை தற்போது சீராக, கட்டுப்பாட்டுக்குள் உள்ளது என்று கூறினார்.

ALSO READ: M.S. தோனியின் பொறோருக்கு கொரோனா தொற்று உறுதி; மருத்துவமனையின் அனுமதி

தோனியின் பெற்றோர் குறித்த புதுப்பிப்பு 

ஃப்ளெமிங் கூறுகையில், "அணி நிர்வாகத்துக்கு தோனியின் (MS Dhoni) குடும்பத்தின் தற்போதய நிலைமை குறித்து நன்கு தெரியும். இந்த நிலையில், தோனிக்கும் அவரது குடும்பத்துக்கும் ஆதரவாக இருந்து உதவுவதற்கான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது நிலைமை கட்டுகுள் உள்ளது. எனினும் தொடர்ந்து நாங்கள் நிலைமையை கண்காணிக்க உள்ளோம்" என்றார்.  

தோனியின் பெற்றோர் புதன்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்

புதன்கிழமை, முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தாய் தேவிகா தேவி மற்றும் தந்தை பான் சிங் தோனி ஆகியோருக்கு கொரோனா தொற்று (Coronavirus) உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். எம்.எஸ்.தோனியின் தந்தையும் தாயும் ராஞ்சியில் உள்ள பல்ஸ் சூப்பர்ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் (Pulse Super Speciality Hospital) சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அவர்களது உடல்நிலை சீராக உள்ளது. 

மருத்துவமனையின் கூற்றுப்படி, தோனியின் பெற்றோரின் நிலை சீராக உள்ளது. அவர்களது ஆக்ஸிஜன் அளவும் நன்றாக உள்ளது, தொற்று நுரையீரலை எட்டவில்லை. சில நாட்களில் இருவரும் ஆரோக்கியமாக தொற்றுநோயிலிருந்து விடுபடுவார்கள் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ALSO READ: ஐ.பி.எல் 2021 புள்ளிகள் அட்டவணை: ஆரஞ்சு மற்றும் ஊதா நிற தொப்பி யார் கையில்?

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News