ஐபிஎல் 2022; மும்பையுடன் முறிவு - ராஜஸ்தானுடன் கைகோர்த்த மலிங்கா

ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 11, 2022, 04:34 PM IST
  • ஐபிஎல்லுக்கு திரும்பிய லசித் மலிங்கா
  • ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் கைகோர்ப்பு
  • வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம்
ஐபிஎல் 2022; மும்பையுடன் முறிவு - ராஜஸ்தானுடன் கைகோர்த்த மலிங்கா title=

மார்ச் 26 ஆம் தேதி ஐபிஎல் 2022 தொடர் தொடங்க உள்ள நிலையில், ராஜஸ்தான் அணி, இந்த ஆண்டு புது கம்பீரத்துடன் களத்தில் இறங்க ஆயத்தமாகி வருகிறது. இலங்கை அணியின் முன்னாள் கேப்டனாக இருக்கும் குமார் சங்ககாரா, இதற்காக தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறார். தலைச்சிறந்த வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அணிக்குள் கொண்டு வரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். அண்மையில், ராஜஸ்தான் அணியின் ஆய்வாளராக பேடி அப்டனை கொண்டு வந்த சங்ககாரா, இப்போது இலங்கை அணியின் தலைச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக இருந்த மலிங்காவையும் ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளராக சேர்த்துள்ளார். 

மேலும் படிக்க | IPL2022: லக்னோ அணியில் இருந்து விலகும் வேகப்பந்து வீச்சாளர்! ஏன்?

ஐபிஎல் தொடர்களில் மும்பை இந்தியன்ஸ் அணிகாக மட்டுமே விளையாடிய லசித் மலிங்கா, பின்னர் அந்த அணியின் வேகப்பந்துவீச்சு ஆலோசகராகவும் இருந்தார். இந்நிலையில், அந்த அணியுடனான நீண்ட நெடிய உறவை முறித்துக் கொண்டு, இந்த முறை ராஜஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சு பயிற்சியாளராக களமிறங்க உள்ளார். மும்பை அணிக்காக 9 சீசன்களில் விளையாடிய அவர், 170 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஐபிஎல் தொடருக்கு திரும்பியது குறித்து பேசியுள்ள லசித் மலிங்கா," ஐபிஎல்லுக்கு திரும்பியது மிகுந்த மகிழ்ச்சி. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் ராஜஸ்தான் அணியுடன் இணைந்து பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்ற இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. கடந்த காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியுடனான பயணம் இனிமையாக இருந்தது. ஐபிஎல்லில் பல்வேறு நினைவுகள் எனக்கு உள்ளன. இப்போது புதிய அணியுடன் பயணிக்க உள்ளேன். பந்துவீச்சாளர்களின் பிளான்களுக்கு ஏற்றவாறு அவர்கள் செயல்படுவதற்கான பயிற்சிகளை நிச்சயம் கொடுப்பேன். ஒரு அணியாக சிறந்து விளங்குவதற்கு என்னுடைய பங்களிப்பை கொடுக்க தயாராக இருக்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | IPL2022: விராட் கோலியின் கேப்டன்சி விலகலை ஏற்காத ஆர்சிபி - புது டிவிஸ்ட்https://zeenews.india.com/tamil/sports/ipl2022-rcb-did-not-accepts-virat-kholi-resignation-384810

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News