இறுதியாக யுவராஜ் சிங்க்கு வாய்ப்பளித்த அளித்த மும்பை இந்தியன்ஸ்

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் யுவராஜ் சிங்கை வாங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி.

Written by - ZEE Bureau | Last Updated : Dec 18, 2018, 09:16 PM IST
இறுதியாக யுவராஜ் சிங்க்கு வாய்ப்பளித்த அளித்த மும்பை இந்தியன்ஸ்

இறுதியாக ரூ.1 கோடிக்கு யுவராஜ் சிங்கை ஏலம் எடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி.

 

 


2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் யுவராஜ் சிங்கை வாங்குவதற்கு, இதுவரை எந்தவொரு அணியும் முக்கியத்துவம் அளிக்கவில்லை. முந்தைய ஏலத்தில் (2018) யுவராஜ் சிங் கிங்ஸ் XI பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இந்த வருட தனது அணியில் பிரீத்தி ஜிந்தா தங்கவைக்காததால், யுவராஜ் தனது அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு, ஐபிஎல் வீரர்களின் ஏல பட்டயலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது.

இந்த முறை யுவராஜ் சிங் தனது அடிப்படை விலையை ஒரு கோடி ரூபாய் வைத்திருந்தார். 2011 ஆம் ஆண்டு இந்தியா உலகக் கோப்பை வெல்ல காரணமாக இருந்தவர்களில் ஒருவரான யுவராஜ் சிங்கின் வாழ்க்கை தற்போது சரிவுகளில் செல்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், அதாவது 2015 ஐபிஎல் ஏலத்தில் 16 கோடி ரூபாய்க்கு யுவராஜ் சிங் வாங்கப்பட்டார். ஆனால் கடந்த முறை 2018 ஆம் ஆண்டு கிங்ஸ் XI பஞ்சாப் அணி 2 கோடி ரூபாய்க்கு அவரை வாங்கியது. இம்முறை அவரை யாரும் ஏலம் எடுக்கவில்லை. 

ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் அவரின் நம்பகத்தன்மையை இன்னும் முடிக்கவில்லை. தற்போதைய ஏலம் முடிந்ததும், விலைபோகாத வீரர்களை மறுபடியும் ஏலம் கேட்க ஒரு அணி விரும்பினால், அவர்களின் அடிப்படை விலையில் அவர்களை ஒப்பந்தம் செய்யலாம். யுவராஜ் சிங் அடிப்படை விலை ரூ. 1 கோடி ஆகும். இந்த பட்டியலில் மொத்தம் 19 வீரர்கள் உள்ளனர்.

More Stories

Trending News