ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரசிகர்கள்? மும்பை - சென்னை அணிகள் காரணமா?

தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் மூலம் ஐபிஎல் போட்டிகளை காணும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

Written by - Bhuvaneshwari P S | Last Updated : Apr 9, 2022, 01:39 PM IST
  • சிஎஸ்கே, மும்பை அணிகளுக்கு அதிக ரசிகர்கள் உள்ளனர்
  • சிஎஸ்கே-மும்பை முதல் 3 போட்டிகளிலும் ஹாட்ரிக் தோல்வி
  • டிவியில் ஐபிஎல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்தது
ஐபிஎல் போட்டிகளை தவிர்க்கும் ரசிகர்கள்? மும்பை - சென்னை அணிகள் காரணமா? title=

ஐபிஎல் 15வது சீசன் கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் ஐபிஎல் போட்டிகள் நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த முறை புதிதாக இரண்டு அணிகள் இணைந்து மொத்தம் 10 அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐபிஎல் ஜாம்பவான்களான சிஎஸ்கே, மும்பை அணிகள் இந்த முறை ஹாட்ரிக் தோல்வி அடைந்து புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளன. அதோடு குஜராத், மும்பை போன்ற ஒரு சில மைதானங்களில் மட்டுமே ஐபிஎல் போட்டிகள் நடைபெறுகின்றன. இதனால் மற்ற அணிகளின் ரசிகர்கள் சொந்த ஊரில் கிரிக்கெட் போட்டியை காண முடியாத சூழல் உள்ளது.

csk

மேலும் படிக்க | சாஹல்-ஐ கொலை செய்யப்பார்த்த மும்பை அணியின் வீரர் யார்?

இதெல்லாம் ஒருபக்கம் பல ஆயிரம் கோடி ரூபாய் லாபம் பார்க்கும் கிரிக்கெட் பிரீமியர் லீக்கில் முதலிடத்தில் உள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொலைக்காட்சி மூலம் போட்டியை பார்க்கும் ரசிகர்களை சற்று ஏமாற்றியுள்ளதாகவே தெரிகிறது. அதன் காரணமாக தொலைக்காட்சி ரேட்டிங்கில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டும் 14% பார்வையாளர்கள் குறைந்துள்ளனர்.

ஐபிஎல் போட்டிகள் தொடங்கி இரண்டு வாரங்கள் கடந்துள்ளன. இந்நிலையில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களின் மூலம் ஐபிஎல் போட்டிகளை காணும் நபர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர்கள் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. 

மேலும் படிக்க | மைதானத்துக்கு வந்த மனைவி - வெற்றியை பரிசளித்த குருணால் பாண்டியா

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடங்கிய முதல் வாரத்தில் அதற்கான தொலைகாட்சி ரேட்டிங் 3.75 புள்ளிகள் இருந்தது. ஆனால் இந்த முறை 2.52 புள்ளிகள் மட்டுமே கிடைத்துள்ளது. இதன்மூலம் தொலைக்காட்சியில் ஐபிஎல் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. 

MSDhoni

இதற்கு முக்கிய காரணமாக சென்னை, மும்பை அணிகளின் தொடர் தோல்விகள் பார்க்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு தான் அதிக ரசிகர்கள் உள்ளனர். இதுவரை 5 முறை மும்பை அணியும், 4 முறை சென்னை அணியும் ஐபிஎல் கோப்பையை பெற்றுள்ளனர். ஆனால் இந்த முறை நடைபெற்ற முதல் மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்த இரு அணிகளும் புள்ளிப்பட்டியலில் பின் தங்கியுள்ளது.

google

அதோடு குஜராத் மற்றும் லக்னோ அணிகள் புதிதாக இணைந்துள்ள நிலையில், அந்த அணிகளின் போட்டிகளை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு 10 அணிகள் என்பதால் அதிக மேட்ச்களும் உள்ளன. இதனால் ஐபிஎல் மீதான ஆர்வம் குறைந்துள்ளதாகவும் பேசப்படுகிறது. அதோடு தேர்வு நேரம் என்பதாலும் கிரிக்கெட் பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம். எது எப்படியோ சென்னை, மும்பை அணிகள் வெற்றி பெற்றால் இந்த ரேட்டிங் உயரலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News