IPL 2023, Ben Stokes: ஐபிஎல் தொடர் சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு, இந்தியா முழுவதும் உள்ள 12 நகரங்களில் நடைபெற உள்ளது. ஹோம் & அவே பாணியில் நடைபெறும் இந்த தொடரில் கடந்தாண்டை போல 10 அணிகள் பங்கேற்கின்றன.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் குரூப் ஏ பிரிவிலும்; சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் குரூப் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. இதில், தனது குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் தலா ஒருமுறையும், எதிர் குரூப்பில் உள்ள 5 அணியுடன் தலா இரண்டு முறையும் என விளையாட உள்ளன.
ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ஆம் தேதி தொடங்குகிறது. தொடரை முன்னிட்டு நடைபெற்ற ஐபிஎல் மினி ஏலத்தில், பல்வேறு அணிகள் பல வீரர்களை விடுவித்து, வீரர்களையும் அணிக்கு தேர்வு செய்தனர். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ், இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான பென் ஸ்டோக்ஸை ரூ. 16.25 கோடி கொடுத்து எடுத்தது.
மேலும் படிக்க | IPL 2023: இந்த ஆண்டும் மும்பைக்கு பெரிய இழப்பு! முக்கிய வீரர் விளையாட மாட்டார்!
தற்போதைய சிஎஸ்கே கேப்டன் தோனிக்கு இதுதான் கடைசிதொடர் என்பதால் பென் ஸ்டோக்ஸை அடுத்த கேப்டன் என்ற ரீதியில் நிர்வாகம் திட்டமிடுவதாக கூறப்பட்டது. ஆனால், அவருக்கு நியூசிலாந்து அணியுடன் காயம் ஏற்பட்டதை அடுத்து அவர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சந்தேகம் என கூறப்பட்டது.
அவர் கால் முட்டியில் காயமேற்பட்டுள்ளது என கூறப்படும் நிலையில், இந்தாண்டு நடைபெறும் ஆஷஸ் தொடர் தயாராவதற்காக அவர் ஐபிஎல் தொடரை புறக்கணிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. மேலும், இன்று நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவரால் முழுமையாக செயல்பட முடியவில்லை. இதனால், அவரின் காயம் குறித்த கேள்விகள் அதிகமாகியிருந்தது.
இந்நிலையில், செய்தியாளர்களை இன்று சந்தித்த அவர்,"நான் பொய் சொல்லப் போவதில்லை, குறிப்பாக நான்காவது பந்துவீச்சாளர் என்ற முறையில், நான் விரும்புவதைச் செய்வதில் இந்து ஏதோ ஒன்று என்னைத் தடுத்து நிறுத்துகிறது என்பதை அறிந்து மிகவும் விரக்தியடைந்தேன்" என்று அவர் காயம் குறித்து கூறினார். மேலும் அவர்,"நான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் அல்ல. ஆனால் நான் பந்து வீசும்போது, ஏதோ இடைஞ்சல் இருந்தது மட்டும் எனக்கு நன்றாக தெரியும்.
ஆஷஸ் தொடருக்கு முன் நான் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். இப்போது நான்கு மாத கால அவகாசம் உள்ளது. என்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன். நான் அனைத்து சூழல்களையும் கடந்து வந்துள்ளேன்.
நான் என் பிசியோ மற்றும் மருத்துவர்களுடன் கடினமாக உழைத்து வருகிறேன். ஆனால் விளையாடியபோது, என் முழங்காலை வைத்துக்கொண்டு விளையாட முடியவில்லை. நான் ஐபிஎல் தொடருக்கு போகிறேன், கவலைப்பட வேண்டாம். நான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சியாளர் ஃப்ளெமிங் உடன் உரையாடியுள்ளேன். தற்போது எனது உடல்நிலை குறித்து அவர் முழுமையாக அறிந்துள்ளார்" என பேசியுள்ளார். எனவே, அவர் சிஎஸ்கே அணிக்கு விளையாடுவது குறித்து ஏறத்தாழ உறுதியாகியுள்ளது.
இங்கிலாந்து அணியுடன் நியூசிலாந்து அணி 1 ரன் வித்தியாசத்தில் வென்று, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றது. இதுவரை டெஸ்ட் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இதுவே இரண்டாவது முறையாகும்.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ