IPL 2023 RCB vs KKR: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்களில் முதல் பாதி நேற்றோடு முடிந்தது. அதாவது, அனைத்து அணிகளும் தலா 7 போட்டிகளில் விளையாடிவிட்டன. அந்த வகையில், இன்று லீக் போட்டியின் இரண்டாம் பாதி தொடங்கியது எனலாம்.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று நடைபெற்ற 36ஆவது லீக் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. தொடர்ச்சியாக மூன்றாவது போட்டியாக, விராட் கோலி இன்றும் கேப்டனாக செயல்பாட்டார். டாஸ் வென்ற அவர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கேகேஆர் அணிக்கு ஜேசன் ராய், ஜெகதீசன் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடி பவர்பிளேயில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. குறிப்பாக, ஷாபாஸ் அகமது வீசிய 6ஆவது ஓவரில் ராய் 4 சிக்ஸர்களை விளாசினார். அந்த ஓவரில் 25 ரன்கள் எடுக்கப்பட்டது.
பவர்பிளேயில் 66 ரன்களை இந்த ஜோடி குவித்தது. தொடர்ந்து, 10ஆவது ஓவரில் ஜெகதீசன் 27(29) ரன்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் ஜேசன் ராய் 56(29) ரன்களில் நடையைக்கட்டினார். இரண்டு விக்கெட்டுகளையும் விஜய்குமார் வைஷாக் கைப்பற்றினார்.
இதையடுத்து, நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர் நல்ல பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர். இந்த ஜோடி 80 ரன்களை எடுத்தபோது, நிதிஷ் 48(21), வெங்கடேஷ் ஐயர் 31(26) ரன்களில் ஹசரங்கா வீசிய 18ஆவது ஓவரில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து, சிராஜ் ஓவரில் ரிங்கு சிங் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளை அடித்து மிரட்டினார். 19ஆவது ஓவரின் கடைசி பந்தில் ரஸ்ஸல் அவுட்டாக, ஹர்ஷல் படேல் வீசிய கடைசி ஓவரில் டேவிட் வைஸ் இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்களை எடுத்தது.
Half-century numberfor captain @imVkohli
He's leading from the front in style for @RCBTweets!
Will this be a match-winning knock folks?
Follow the match https://t.co/o8MipjFKT1 #TATAIPL | #RCBvKKR pic.twitter.com/fzJbisUMhr
— IndianPremierLeague (@IPL) April 26, 2023
பெங்களூரு பந்துவீச்சு தரப்பில், வைஷாக், ஹசரங்கா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சிராஜ் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 201 ரன்கள் என்ற இலக்கை ஆர்சிபி துரத்திய நிலையில், விராட் - டூ பிளேசிஸ் (இம்பாக்ட் சப்) நல்ல தொடக்கத்தை அளித்தது. துரதிருஷ்ட வசமாக டூ பிளேசிஸ் 17(7) சுயாஷ் வீசிய 3ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். ஷாபாஸ் 2, மேக்ஸ்வெல் 5 என அடுத்தடுத்து ஆட்டமிழக்க ஆர்சிபி தடுமாறியது.
அந்த சமயத்தில், இளம்வீரர் லோம்ரோர் உடன் ஜோடி சேர்ந்த கேப்டன் கோலி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். லோம்ரோர் சிக்ஸர்களை பறக்கவிட, விராட் பவுண்டரிகளை அடித்து ஸ்ட்ரைக்கை ரோடேட் செய்து வந்தார். விராட் கோலி அரைசதம் கடந்த நிலையில், இந்த ஜோடி 55 ரன்களை எடுத்தது. அந்த நிலையில் லோம்ரோர் 34(18) ரன்களிலும், அடுத்த ஓவரில் விராட் 54
(37) ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து, பிரபுதேஷாய் 10, ஹசரங்கா 5, தினேஷ் கார்த்திக் 22 என ஆட்டமிழக்க இறுதியிலும் பெரிதாய் ரன்கள் எடுக்க முடியவில்லை. இதனால், பெங்களூரு அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம், கொல்கத்தா அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தனது 3ஆவது வெற்றியை பெற்றது.
முன்னதாக, இத்தொடரில் கொல்கத்தாவில் நடைபெற்ற லீக் போட்டியிலும், கொல்கத்தாவிடம் பெங்களூரு தோல்வியடைந்தது நினைவுக்கூரத்தக்கது. இந்த போட்டியில், கேகேஆர் பந்துவீச்சில், வருண் சக்ரவர்த்தி 3, ரஸ்ஸல், சுயாஷ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். வருண் சக்ரவர்த்தி ஆட்டநாயகனாக தேர்வானார். புள்ளிப்பட்டியலில், கேகேஆர் 7ஆவது இடத்திலும், பெங்களூரு 5ஆவது இடத்திலும் உள்ளன.
மேலும் படிக்க | IPL 2023: ரோஹித்துக்கு ரெஸ்ட்... மூத்த வீரர் சொல்லும் ஸ்மார்ட்டான அட்வைஸ்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ