ஜல்லிக்கட்டு அதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் வென்ற தங்கப் பதக்கத்தை திருப்பி கொடுப்பதாக மாரியப்பன் அறிவிப்பு.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். காட்சிப் படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலிலிருந்து காளையை நீக்க வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். மேலும் இந்த போராட்டத்தில் அரசியல், சினிமா சாயம் இருக்கக் கூடாது என்பது இளைஞர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தம்முடைய பதக்கத்தை திருப்பித் தருவதாக அறிவித்துள்ளார். ஏற்கனவே கானகன்' நாவலுக்காக எழுத்தாளர் லஷ்மி சரவணகுமார் அவருக்கு சாகித்ய அகாடமி வழங்கிய யுவபுரஸ்கார் விருதினை மத்திய அரசிடம் திருப்பியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.