ரோகித் இல்லாததால் டிராவிட் ஹேப்பி; முன்னாள் இந்திய வீரரின் அதிரடி கருத்து

ரோகித் இல்லாததால் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பிளேயிங் லெவனை தேர்வு செய்வதில் குழப்பம் இருக்காது என இந்திய முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 13, 2022, 06:21 PM IST
  • காயத்தால் விலகிய ரோகித் சர்மா
  • நாளை முதல் டெஸ்ட் போட்டி தொடக்கம்
  • ரோகித் குறித்து முகமது கைஃப் கருத்து
ரோகித் இல்லாததால் டிராவிட் ஹேப்பி; முன்னாள் இந்திய வீரரின் அதிரடி கருத்து title=

வங்கதேசம் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, அடுத்ததாக டெஸ்ட் போட்டியில் பங்கேற்க இருக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் நாளை தொடங்குகிறது. காயத்தால் கேப்டன் ரோகித் சர்மா விலகிவிட்டதால், கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி, வங்கதேசம் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டி குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப், ரோகித் சர்மா இல்லாததால் இந்திய அணியில் பிளேயிங் லெவன் தேர்ந்தெடுப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க | இப்படி ஒரு இக்கட்டான நிலையில் இந்திய அணி! என்ன செய்யப்போகிறது பிசிசிஐ?

டெஸ்ட் போட்டி தொடக்கம்

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை கே.எல்.ராகுல் வழிநடத்துக்கிறார். கேப்டன் ரோகித் சர்மா விலகியிருப்பதால், அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் இந்த தொடரில் அவருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுத்துள்ளது. 

முகமது கைஃப் அதிரடி கருத்து 

சோனி ஸ்போர்ட்ஸூக்கு அவர் அளித்த பேட்டியில், "ரோகித் சர்மா இல்லாததால் இந்திய அணியை எளிதாக தேர்வு செய்ய முடியும். தொடக்க ஆட்டக்காரர்களை தேர்வு செய்வதிலும் எந்த குழப்பமும் இருக்காது என நினைக்கிறேன். கே.எல்.ராகுல் மற்றும் ஷூப்மான் கில் ஆகியோர் ஓப்பனிங் இறங்குவார்கள். ஒருவேளை ரோகித் சர்மா அணியில் இருந்திருந்தால் இவர்களில் யாரேனும் ஒருவர் பெஞ்சில் உட்கார வைக்கப்பட்டிருப்பார். இப்போது இந்திய அணிக்கு அந்த பிரச்சனை இல்லை. ராகுல், கில் ஓப்பனிங் செய்தால், 3வது இடத்தில் புஜாராவும், 4வது இடத்தில் விராட் கோலியும் இறங்குவார்கள். அஸ்வின் உள்ளிட்ட 5 பந்துவீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் என நினைக்கிறேன்" எனக் கூறினார்.   

மேலும் படிக்க | காயமடைந்த போர்கண்ட சிங்கமாய் புலிகளுக்கு எதிரியாக களமிறக்கும் இந்திய படை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News