ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை இம்மாத இறுதியில் தொடங்க இருக்கிறது. இதில் பங்கேற்கும் இந்திய அணி, கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுவிட்டது. அங்கு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இந்திய அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருக்கிறது. பார்ப்பதற்கு இந்திய அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக தெரிந்தாலும், பந்துவீச்சு மிகப்பெரிய கவலைக்குரியதாக இருக்கிறது.
ஏற்கனவே ஜடேஜா மற்றும் பும்ரா காயத்தால் 20 ஓவர் உலககோப்பை தொடரில் இருந்து விலகிவிட்டனர். அவர்களுக்கு பதிலாக சேர்க்கப்பட்ட தீபக் சாஹரும் காயத்தால் அவதிப்பட்டு பெங்களுருவில் இருக்கும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார். இது இந்திய அணிக்கு பெரும் கவலையாக மாறியுள்ளது. இதனால், பும்ராவுக்கு நிகரான அனுபவம் மற்றும் திறமையான பந்துவீச்சாளரை களமிறக்க வேண்டிய நெருக்கடியும் பிசிசிஐக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தொடரை அசால்டாக வென்றது இந்தியா - சிக்ஸ் அடித்து ஆட்டத்தை முடித்த ஷ்ரேயஸ்!
யாரை தேர்வு செய்யலாம் என தீவிர ஆலோசனை நடத்திய பிசிசிஐ, கடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு பிறகு இந்திய 20 ஓவர் அணிக்கு அழைக்கப்படாத முகமது ஷமியை பும்ராவுக்கு மாற்றாக களமிறக்க முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அவரை பிட்னஸ் டெஸ்டுக்கு பிசிசிஐ அனுமதித்தது. அந்த சோதனையில் முகமது ஷமி தேர்வாகியிருப்பதால் ஏறக்குறைய அவர் ஆஸ்திரேலியாவுக்கு பறப்பது உறுதியாகவிட்டது.
அண்மையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டடிருந்த முகமது ஷமி கடைசி நேரத்தில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 20 ஓவர்தொடரில் பங்கேற்க முடியாமல் போனது. முறையான சிகிச்சை மற்றும் முழுமையான ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட் களத்துக்கு திருமயிருக்கும் அவர், 20 ஓவர் உலக கோப்பைக்கான இந்திய அணியில் சேர்க்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய மற்றும் வெளிநாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் முகமது ஷமியை சேர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த விவகாரத்தில் பிசிசிஐ என்ன முடிவு எடுக்கப்போகிறது என்பது மர்ம பிரதேசமாக இருக்கிறது. ஆனால், முகமது ஷமி, நான் இங்கே தயாராக இருக்கிறேன். என்னை ஆஸ்திரேலியாவுக்கு கூப்பிடுங்க கேப்டன் ரோகித் சர்மா, எல்லாத்தையும் பாத்துக்கிறேன் என்ற மைண்ட் செட்டில் ரெடியாக இருக்கிறார் முகமது ஷமி.
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ