5வது போட்டியிலும் மும்பை தோல்வி - பிளே ஆஃப் சுற்று கேள்விக்குறி

பரபரப்பாக நடைபெற்ற பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி மீண்டும் தோல்வியை தழுவியது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 13, 2022, 11:31 PM IST
  • 12 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
  • மும்பை அணி தொடர்ச்சியாக 5வது தோல்வி
  • பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கேள்விக்குறி
5வது போட்டியிலும் மும்பை தோல்வி - பிளே ஆஃப் சுற்று கேள்விக்குறி title=

மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான 23வது லீக் போட்டி புனே ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் சர்மா பவுலிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி களமிறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கேப்டன் மயங்க் அகர்வால் 32 பந்துகளில் 52 ரன்கள் விளாசினார். 2 சிக்ச்களையும் 6 பவுண்டரிகளையும் பறக்கவிட்டார். 

மேலும் படிக்க | பஞ்சாப்பை பதறவைத்த பீரிவிஸ் யார்?

மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான தவான் 50 பந்துகளில் 70 ரன்கள் விளாசினார். 3 சிக்சர்களையும் 5 பவுண்டரிகளையும் விளாசிய தவான் கேட்ச் என்ற முறையில் அவுட்டானார். பின்வரிசையில் களமிறங்கிய ஜிதேஷ் சர்மா 15 பந்துகளில் 30 ரன்கள் விளாச, பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 198 ரன்கள் குவித்தனர்.

4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வியை தழுவிய மும்பை அணி இப்போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் 2வது பேட்டிங்கை தொடர்ந்தது. கேப்டன் ரோகித் சர்மா, 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்சர்களை விளாசி 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் இஷான் கிஷன் 3 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கிய பிரெவிஸ் பஞ்சாப் அணியை பதறவிட்டார்.

மேலும் படிக்க | கிரிக்கெட் வரலாற்றில் 6 பந்துகளில் 6 விக்கெட் இழந்த அணி

25 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட அவர், 49 ரன்கள் விளாசினார். அதில் ராகுல் சாஹரின் ஓவரில் விளாசிய 4 சிக்சர்களும் அடங்கும். இதில் 112 மீட்டர் மெகா சிக்சரையும் பிரெவிஸ் விளாசினார். அவர் அவுட்டான பிறகு களமிறங்கிய பொல்லார்டு, எதிர்பாரதவிதமாக ரன்அவுட்டானார். ஆனால், களத்தில் இருந்த சூர்யகுமார் யாதவ், அதிரடியாக விளையாடி மும்பை அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.  19 வது ஓவரில் ரபாடா பந்தில்  அவர் ஆட்டமிழந்தார். 30 பந்துகளை எதிர்கொண்ட சூர்யகுமார் யாதவ், 43 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி 3 பந்துகளில் 13 ரன்கள் தேவைப்பட்டது. பரபரப்பாக சென்ற போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News