Rohit sharma: சூப்பரா ஆடுற சபாஷ் டிகே.. உலக கோப்பை விளையாடலாமா? ரோகித் சர்மா குசும்பு

Rohit Sharma, Dinesh Karthik: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த தினேஷ் கார்த்திக்கை ரோகித் சர்மா கிண்டல் செய்த வீடியோ வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 12, 2024, 11:53 AM IST
  • அதிரடியாக ஆடிய ஆர்சிபி தினேஷ் கார்த்திக்
  • அருகே வந்து கலாய்த்துவிட்டு போன ரோகித்
  • மும்பை, ஆர்சிபி மேட்சில் நடந்த சுவாரஸ்யம்
Rohit sharma: சூப்பரா ஆடுற சபாஷ் டிகே.. உலக கோப்பை விளையாடலாமா? ரோகித் சர்மா குசும்பு title=

மும்பை இந்தியன்ஸ் வெற்றி

ஐபிஎல் 2024 டி20 தொடரில் 25வது லீக் போட்டியில் ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, புள்ளிப் பட்டியலிலும் 7வது இடத்துக்கு முன்னேறியது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) பேட்டிங்கில் கலக்கியபோதும், பந்துவீச்சில் மீண்டும் கோட்டைவிட்டது. அந்த அணி தான் முதலில் பேட்டிங் ஆடியது. ஆர்சிபி கேப்டன் பிளேஸிஸ் 61, ரஜத் படிடார் 50 விளாச, இறுதி கட்டத்தில் வெளுத்து வாங்கிய தினேஷ் கார்த்திக் 53* ரன்கள் எடுத்தார். இதனால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 196 ரன்கள் குவித்தது.

மேலும் படிக்க | ஐபிஎல்லில் ஆமை வேகத்தில் சதம் அடித்த 5 பேட்ஸ்மேன்கள் யார் தெரியுமா?

அதிரடியாக ஆடிய மும்பை இந்தியன்ஸ்

பின்னர் சேசிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியும் அதிரடியாக ஆடியது. ஓப்பனிங் இறங்கிய ரோஹித் சர்மா 38, இசான் கிசான் 69 ரன்கள் குவிக்க, ஒன்டவுன் வந்த சூரியகுமார் யாதவ் 52 ரன்கள் அதிரடியாக விளையாடி எடுத்தார். இதன்பிறகு களம் புகுந்த கேப்டன் ஹர்டிக் பாண்டியா 21*, திலக் வர்மா 16* ரன்கள் அடித்து நொறுக்க 15.3 ஓவரிலேயே மும்பை இந்தியன்ஸ் அணி எளிதாக வெற்றி பெற்றது. இது மும்பை இந்தியன்ஸ் அணியின் 2வது வெற்றியாகும். ஆர்சிபி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் சந்திக்கும் 5வது தோல்வி. 

ரோகித் சர்மா கிண்டல்

முன்னதாக இந்தப் போட்டியில் மிடில் ஓவர்களில் களமிறங்கிய ஆர்சிபி வீரர் தினேஷ் கார்த்திக் மும்பை இந்தியன்ஸ் பவுலர்களை அடித்து நொறுக்கினார். குறிப்பாக ஆகாஷ் மாத்வால் வீசிய இறுதி ஓவரில் 4 பவுண்டரிகளை அடித்தார். இதனால் வியந்துபோன ரோகித் சர்மா, தினேஷ் கார்த்திக் அருகே சென்று. “சபாஸ் டிகே. உலக கோப்பைக்கு ரெடியாகிட்டீங்க போல, உங்களையும் இந்திய அணிக்கு எடுக்கலாமா?” என்று கைதட்டி பாராட்டி தினேஷ் கார்த்திக்கை கலாய்த்தார். அவரும் பதிலுக்கு வயிறுகுலுங்க சிரித்தார்.

உலக கோப்பைக்கான அணியில் வாய்ப்பு

இந்த போட்டியில் 5 பவுண்டரி 4 சிக்சரை பறக்க விட்ட தினேஷ் கார்த்திக் 230.43 ஸ்ட்ரைக் ரேட்டில் 53* (23) ரன்கள் குவித்து பெங்களூருவுக்கு அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். சொல்லப்போனால் கேரியர் முடிந்ததாக கருதப்பட்ட அவர் 2022 ஐபிஎல் தொடரில் 330 ரன்களை அடித்து மிரட்டியதால் இந்தியாவுக்காக கம்பேக் கொடுத்து ஆஸ்திரேலியாவில் நடந்த டி20 உலகக் கோப்பையில் விளையாடினார். ஆனால் அதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த தவறியதால் மீண்டும் தினேஷ் கார்த்திக் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார். இருப்பினும் தற்போது டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள இந்த வருடத்தில் மீண்டும் அவர் ஐபிஎல் தொடரில் அசத்தி வருகிறார். ஆனால் தற்போது ரிங்கு சிங் போன்ற வீரர்கள் இருப்பதால் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் தான்.

மேலும் படிக்க | சென்னை அணிக்கு புதிய சிக்கல்! அணிக்கு திரும்பும் டெவோன் கான்வே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News