புதுடெல்லி: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களான (Pakistan cricketers) முகமது ஹபீஸ், வஹாப் ரியாஸ் உட்பட மேலும் 7 பாகிஸ்தான் வீரர்களுக்கு கோவிட் -19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (Pakistan Cricket Board) இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இங்கிலாந்து (Pakistan tour of England, 2020) செல்ல இருந்த பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் பாதிக்கப்பட்ட வீரர்களின் மொத்த எண்ணிக்கை பத்து ஆக உயர்ந்துள்ளது. அதேபோல திங்களன்று, மூன்று வீரர்கள் கொரோனா வைரஸுக்கு சாதகமாக (Corona Positive) சோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
காஷிப் பட்டி, முகமது ஹஸ்னைன், ஃபக்கர் ஜமான், முகமது ரிஸ்வான், முகமது ஹபீஸ், வஹாப் ரியாஸ், இம்ரான் கான் ஆகியோர் இங்கிலாந்தி சுற்றுப்பயணம் செல்லும் பாகிஸ்தான் அணியின் ஏழு வீரர்களுக்கு இன்று கொரோனா நேர்மறையை சோதனை செய்யப்பட்டது. அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
READ | டென்னிஸ் வீரர் Novak Djokovic கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்
"இது பயப்படவேண்டிய சூழ்நிலை அல்ல, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 10 பேரும் இளம் விளையாட்டு வீரர்கள் என்பதால் ஆபத்து இல்லை எனக் கூறப்படுகிறது.
இதுக்குறித்து செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி - PCB) தலைமை நிர்வாக அதிகாரி வாசிம் கான் (Wasim Khan), இந்த வீரர்களுக்கு கொரோனா வைரஸ் (COVID-19) தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதால், அணியில் இருக்கும் யாருக்கும் ஏற்படலாம் அல்லது ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறினார். மேலும் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இப்போது லாகூரில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு ஜூன் 25 ஆம் தேதி மீண்டும் ஒரு சோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும், அதன்பிறகே இங்கிலாந்து செல்லும் அணி அறிவிக்கப்படும் என்றும் கான் கூறினார்.
READ | சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்த ஹர்பஜன்சிங்!
அடுத்த மாதம் நடைபெறவுள்ள தொடருக்கு ஜூன் 28 ஆம் தேதி அணி சுற்றுப்பயணம் (Pakistan tour of England, 2020) மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில், "இது கவலைக்குரிய விஷயமாக உள்ளது. ஆனால் எங்களிடம் நேரம் இருப்பதால், இந்த நேரத்தில் நாங்கள் பதற்றம் அடையவில்லை என்றும் கான் கூறினார்.
வீரர்கள் மற்றும் அதிகாரிகள் இங்கிலாந்து நாட்டுக்கு செல்வதற்கு முன்பாக மீண்டும் சோதனை செய்யப்படுவார்கள் என்று அவர் கூறினார்.