பாகிஸ்தான் அதிரடி முடிவு! இனி ஐசிசி போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் விளையாட மாட்டார்கள்?

India vs Pakistan: இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் 2026 டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணிக்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Written by - RK Spark | Last Updated : Jul 15, 2024, 07:16 PM IST
  • அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி.
  • பாகிஸ்தானுக்கு செல்ல இந்தியா மறுப்பு.
  • 2026 டி20 உலக கோப்பையை புறக்கணிக்கும் பாகிஸ்தான்?
பாகிஸ்தான் அதிரடி முடிவு! இனி ஐசிசி போட்டிகளிலும் இந்தியா - பாகிஸ்தான் விளையாட மாட்டார்கள்? title=

அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்தால், 2026ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் டி20 உலகக் கோப்பையை புறக்கணிப்போம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணி எச்சரிக்கை விடுத்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தற்போது கிரிக்கெட் உலகில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. மேலும் இது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே நீண்ட ஆண்டுகளாக பிரச்சனை நிலவி வருகிறது. இந்திய அணி கடைசியாக 2008ம் பாகிஸ்தான் சென்றது. அதன்பிறகு இன்றுவரை ஐசிசி தொடர்களுக்கு கூட பாகிஸ்தான் செல்லவில்லை. இரு அணிகளுக்கும் இடையே கடைசியாக 2012ம் ஆண்டு இருதரப்பு தொடர் நடைபெற்றது. அதன் பிறகு ஐசிசி தொடர்களில் மட்டுமே விளையாடி வருகின்றன.

மேலும் படிக்க | ரோகித் சர்மா ஒருநாள் போட்டியில் ஓய்வா? அடுத்த உலக்ககோப்பை வரை டைம் இருக்கு பாஸ்

தற்போது சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடருக்கு இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மருத்துள்ளதால் இந்த பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலக கோப்பையில் விளையாட பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வந்து இருந்தது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வீரர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானுக்கு வர முடியாது என்று தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு பதில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய் அல்லது இலங்கையில் நடத்துமாறு பிசிசிஐ ஐசிசியிடம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ளது, மேலும் அனைத்து சாம்பியன்ஷிப் போட்டிகளும் பாகிஸ்தானில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று ஐசிசியிடம் தெரிவித்துள்ளது.

2026 டி20 உலக கோப்பையை புறக்கணிக்கும் பாகிஸ்தான்?

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால், 2026 டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் புறக்கணிக்கும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது. 2023 ஆசியக் கோப்பையிலும் இதே போன்ற பிரச்சனை ஏற்பட்டது. அப்போது இந்திய அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் நடைபெற்றது. டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி புறக்கணித்தால் உலகளாவிய கிரிக்கெட் தொடர்களில் முக்கிய பிரச்சனையாக பேசப்படும். ஏனெனில் ஐசிசி நடத்தும் போட்டிகள் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு அணிகளும் ஐசிசி கோப்பைகளை வெல்ல கடுமையாக போராடி வருகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே பலரும் விரும்பி பார்ப்பது வழக்கம். ஐசிசி போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் விளையாடுவதால் இதன் எதிர்பார்ப்பு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

வரும் ஜூலை 19 முதல் 22 வரை கொழும்பில் ஐசிசியின் ஆண்டுக் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சாம்பியன்சிப் போட்டி குறித்து நிச்சயம் விவாதிக்கப்படும். இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு இந்திய அணி நிச்சயம் வர வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக உள்ளது. இந்நிலையில், ஆசிய கோப்பை நடைபெற்றது போலவே ஹைப்ரிட் மாடலில் இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்த ஐசிசி பரிசீலித்து வருவதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களை முன்னிறுத்தி ஐசிசியிடம் பிசிசிஐ கோரிக்கை வைத்துள்ளது.

மேலும் படிக்க | ICC Champions Trophy 2025: இந்தியா பாகிஸ்தானுக்கு செல்லவில்லை என்றால் என்ன நடக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News