ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று இன்றுடன் நிறைவடைகிறது. அரையிறுதிக்கு முதல் பிரிவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளும், இரண்டாம் பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் முன்னேறியுள்ளன.
இந்நிலையில், சூப்பர் 12 சுற்றின் கடைசி போட்டியான இந்தியா - ஜிம்பாப்வே போட்டி என்பது இந்தியாவுக்கு முக்கியமான போட்டியாக உள்ளது. ஏனென்றால், இந்த போட்டியை இந்தியா வென்றால், புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும் நிலையில், அரையிறுதியில், இங்கிலாந்து அணியை சந்திக்கும். ஒருவேளை தோல்வியுற்றால் நியூசிலாந்து அணியை சந்திக்க நேரிடும்.
நியூசிலாந்து அணியிடம் ஐசிசி தொடர்களின் நாக்-அவுட்களில் இந்தியா ஒருமுறை கூட வெற்றி பெற்றதில்லை, என்பதால் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோத வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் பார்வையாக உள்ளது.
Preps
Just over an hour away from the LIVE action! #TeamIndia | #T20WorldCup | #INDvZIM pic.twitter.com/jVRcppWtjj
— BCCI (@BCCI) November 6, 2022
அந்த வகையில், மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மேலும் பிளேயிங் லெவனில் தினேஷ் கார்த்திக்கிற்கு பதில் ரிஷப் பண்டை இந்திய அணி கொண்டுவந்துள்ளது.
டாஸ் போட்ட பின் ரோஹித் சர்மா கூறுகையில்,"ஆடுகளத்திற்காக நாங்கள் முதலில் பேட் செய்யவில்லை. முதலில் பேட் செய்தால், இலக்கை டிபண்ட் செய்ய பந்துவீச்சாளர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்ற காரணத்தால் அந்த முடிவை எடுத்துள்ளோம்.
ஒரே ஒரு மாற்றம்தான் தினேஷ் கார்த்திக்கிற்கு ஓய்வளித்துவிட்டு, ரிஷப் பண்டுக்கு வாய்ப்பளித்துள்ளோம். ஏனென்றால், இந்த தொடரில் ஒரு போட்டியைக் கூட விளையாடாதாது அவர்தான்" என்றார்.
Toss & Team Update @ImRo45 has won the toss & #TeamIndia have elected to bat against Zimbabwe in Melbourne. #T20WorldCup | #INDvZIM
Follow the match https://t.co/shiBY8Kmge
1 change to our Playing XI as @RishabhPant17 is named in the team pic.twitter.com/J8gFfFv4cv
— BCCI (@BCCI) November 6, 2022
மேலும் தென்னாப்பிரிக்கா உடனான போட்டியில், தினேஷ் கார்த்திக்கிற்கு காயம் ஏற்பட்டாலும், அடுத்த வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அழர் விளையாடிருந்தார். எனவே, அரையிறுதிக்கு ரிஷப் பண்டிற்கு வாய்ப்பளிக்கப்படுமா அல்லது மீண்டும் தினேஷ் கார்த்திக் சேர்க்கப்படுவாரா என்பது இந்த போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவதை பொறுத்துதான் இருக்கிறது.
மேலும் படிக்க | ரோஹித் சர்மாவுக்கு ஜோடி இவரா - உலகக்கோப்பைக்கு இந்தியாவின் 'ஓப்பனிங்' பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ