சுழற்பந்து மன்னன் ஷேன் வார்னின் கடைசி நிமிடங்கள்: விவரித்து வருந்திய நண்பர்

Shane Warne: ஒரு முழுமையான ஆஸ்திரேலியரான ஷேன் வார்னின் கடைசி உணவு அது என அப்போது எனக்கு தெரியாது: நண்பர் ஹால்

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 7, 2022, 01:10 PM IST
  • வார்னியும் கிரிக்கெட்டும் எப்போதும் ஒருவரை விட்டு ஒருவர் இருந்ததில்லை: டாம் ஹால்
  • அவர் ஒரு துணிக்கடையில் இருப்பவர்போல் பல ஆடைகளுடன் திரும்பி வந்தார்: டாம் ஹால்
  • அவர் ஒரு முழுமையான ஆஸ்திரேலியர்: டாம் ஹால்.
சுழற்பந்து மன்னன் ஷேன் வார்னின் கடைசி நிமிடங்கள்: விவரித்து வருந்திய நண்பர் title=

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மனங்களில் தனி இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஷேர்ன் வார்ன் மார்ச் மாதம் 4 ஆம் தேதி தாய்லாந்தில் திடீர் மாரடைப்பால் காலமானார். 

இறப்பதற்கு சில மணி நேரங்கள் முன்பு, ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்ன், தனது பழைய கிரிக்கெட் ஜெர்சிகளை பரிசாக அளித்துள்ளார். ஆஸ்திரேலிய பாரம்பரிய சிற்றுண்டியான வெஜ்மைட்டை சாப்பிட்ட அவர், ராவல்பிண்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் இடையே நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியை பார்த்துக்கொண்டிருந்ததாக ரிசார்ட்டில் தங்கியிருந்த அவரது நண்பர் ஒருவர் தெரிவித்தார். 

தாய்லாந்தில் உள்ள கோ சாமுய் நகரில் தங்கியிருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன், அவரது அறையில் மயங்கி விழுந்த நிலையில் காணப்பட்டார். 52 வயதான வார்ன் திடீர் மாரடைப்பால் காலமானார்.

தி ஸ்போர்ட்டிங் நியூஸ் இணையதளத்தின் தலைமை நிர்வாகியும், ஷேன் வார்னின் நீண்டகால கூட்டாளியுமான டாம் ஹால், வார்னின் மரணத்தில் சந்தேகத்திற்கு இடமான எதுவும் இல்லை என்று தெரிவித்தார். 

வார்னியும் கிரிக்கெட்டும் எப்போதும் ஒருவரை விட்டு ஒருவர் இருந்ததில்லை என்றார் டாம் ஹால்.

டெஸ்ட் தொடரின் முதல் ஆட்டத்தின் முதல் சில பந்துகளை பார்த்த ஷேன் வார்ன், மிகவும் மகிழ்ச்சியாக தன்னுடைய அறைக்குள் ஓடினார். 

"அவர் ஒரு துணிக்கடையில் இருப்பவர்போல் பல ஆடைகளுடன் திரும்பி வந்தார்," என ஹால் கூறினார்.

"ஷேன் கடந்த ஒரு வருடமாக தி ஸ்போர்ட்டிங் நியூஸில் என்னுடன் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவர் 2005 ஆஷஸ் டெஸ்டின் ஜம்பர், 2008 ஐபிஎல் சட்டை மற்றும் ஒரு ஒரு நாள் சர்வதேச போட்டியின் சட்டை மற்றும் தொப்பி ஆகியவற்றை ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள டிஎஸ்என் அலுவலகங்களில் வைப்பதற்காக என்னிடம் வழங்கினார். "

மேலும் படிக்க | வார்னேவால் இந்திய அணிக்கு கிடைத்த ஆல்ரவுண்டர்? ராக்ஸ்டார்

இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) தனது முதல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றதைப் பற்றிய கதைகளை வார்னே தன்னிடம் கூறியதாக ஹால் மேலும் கூறினார். பின்னர் சிறிது நேரம் வேடிக்கையாக பேசிக்கொண்டு இருந்துவிட்டு, சாப்பிட போகலாம் என வார்ன் கூறியுள்ளார். 

"நான் ஷேனுடன் பல சிறந்த உணவகங்களில் உணவருந்தியுள்ளேன். ஆனால் தாய்லாந்து உணவை ருசிபார்க்காமல் நாங்கள் ஆஸ்திரேலிய உணவையே அப்போது உண்டோம்." என்று ஹால் கூறினார்.

"இந்த டிஷ்ஷை வெல்ல வேறு எந்த உணவும் இல்லை. உலகின் எந்த மூலையிலும் இது கிடைக்கும்" என ஷேன் ஆஸ்திரேலிய உணவு வகையை புகழ்ந்ததாகவும் அவர் கூறினார். 

"ஒரு முழுமையான ஆஸ்திரேலியரான ஷேன் வார்னின் கடைசி உணவு அது என அப்போது எனக்கு தெரியாது" என்று வருத்தப்பட்டார் ஹால்.

வார்னே இறப்பதற்கு முன் அவருக்கு நெஞ்சுவலி, ஆஸ்துமா மற்றும் சில இதயப் பிரச்சனைகள் இருந்ததாக தாய்லாந்து காவல்துறை சனிக்கிழமை தெரிவித்தது. ஷேன் வார்னுடன் தாய்லாந்துக்கு சென்ற யாருக்கும் அவர் மருத்துவர்களை ஆலோசித்து வந்தது பற்றி எதுவும் தெரியாது என்றார் ஹால். எனினும் லேசான நெஞ்சு வலி மற்றும் மூச்சு வாங்குவதில் சிக்கல் பற்றி ஒரு நண்பரிடம் ஷேன் வார்ன் கூறியிருந்ததாக ஹால் கூறினார். 

மேலும் படிக்க | வார்னே இந்த விஷயத்துக்கு அடிமையாக இருந்தார் - மைக்கேல் கிளார்க் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News