ஓய்வை அறிவிக்காமலேயே முடிவுக்கு வந்த இந்திய வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை

20 ஓவர் கிரிக்கெட்டில் இந்திய வீரரின் சர்வதேச பயணம், ஓய்வை அறிவிக்காமலேயே முடிவுக்கு வந்துள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 13, 2022, 07:43 PM IST
  • 20 ஓவர் கிரிக்கெட்டில் முடிவுக்கு வந்த வாய்ப்பு
  • முகமது ஷமியின் சர்வதேச கிரிக்கெட் பயணம்
  • முன்னாள் வீரரின் கணிப்பு இதுதான்
ஓய்வை அறிவிக்காமலேயே முடிவுக்கு வந்த இந்திய  வீரரின் கிரிக்கெட் வாழ்க்கை title=

இந்திய அணி அடுத்ததாக ஆசியக்கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் விளையாட இருக்கிறது. ரோகித் சர்மா தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் கடந்த உலகக்கோப்பை போட்டியில் களமிறங்கிய வீரருக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. அவரின் 20 ஓவர் கிரிக்கெட் வாழ்க்கை, ஓய்வை அறிவிக்காமலேயே முடிவுக்கு வந்துள்ளது. 

யார் அந்த வீரர்?

முகமது சமிக்கு இந்திய 20 ஓவர் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்கப்படுவதில்லை. கடந்த 20 ஓவர் உலகக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி தோல்வியை தழுவியதற்கு அவரின் பந்துவீச்சு காரணமாக இருந்தது. அந்தப் போட்டியில் அதிக ரன்களை விட்டுக் கொடுத்த முகமது ஷமிக்கு, பிசிசிஐ தேர்வாளர்கள் வாய்ப்புக் கொடுக்கவில்லை. இது குறித்து பிசிசிஐ தேர்வாளர்கள், முகமது ஷமியிடம் தெரிவித்துவிட்டதாக கூறினர். 20 ஓவர் அணியில் உங்களின் பெயர் பரிசீலிக்கப்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | 20 ஓவர் அணியில் எப்போதும் இடமில்லை: இந்திய பவுலருக்கு பிசிசிஐ கொடுத்த அதிர்ச்சி

ரிக்கிப் பாண்டிங் கருத்து

இந்திய அணியில் முகமது ஷிமி தேர்வு செய்யப்படாதது குறித்து பேசும்போது, அவருக்கான வாய்ப்பு இனிமேல் இந்திய அணியில் இருப்பதாக தெரியவில்லை எனக் கூறியுள்ளார். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகிய இருவரும் இந்திய அணியின் 20 ஓவர் போட்டியில் முக்கிய பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள் எனக் கூறியிருக்கும் பாண்டிங், ஆசியக்கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளார். 

முகமது ஷமி ரெக்கார்டு

கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் முகமது ஷமி அணியில் இருந்தார். அப்போது, அவருடைய பந்துவீச்சு சிறப்பாக இருக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவருடைய பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. இதனால், அந்தப் தொடருக்குப் பிறகு 20 ஓவர் இந்திய அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கப்படவே இல்லை. இதுவரை இந்திய அணிக்காக 17 போட்டிகளில் விளையாடியிருக்கும் முகமது ஷமி, 18 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்திருக்கிறார்.

மேலும் படிக்க | 9 ஆண்டுகளுக்கு பிறகு தாயை சந்தித்த பிரபல வீரர்! வைரலாகும் புகைப்படம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News