சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு நடப்பு ஐபி எல் தொடர் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை எனக் கூறலாம்.
தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே சென்னை அணிக்குப் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது. அவ்வணிக்குக் கேப்டனாக இருந்துவந்த தோனி, திடீரென பதவி விலகினார். இதையடுத்து ஜடேஜா சென்னை அணிக்குக் கேப்டன் ஆனார். சென்னை அணி வரிசையாகத் தோற்று புள்ளிப் பட்டியலில் பாதாளத்துக்குச் சென்றது.
கேப்டன் பொறுப்பைத் தோனி துறந்ததுதான் இதற்குக் காரணம் எனக் கூறப்பட்டது. மற்றொருபுறமோ, களத்தில் தோனியே அனைத்து முடிவுகளையும் எடுப்பதாகவும் ஜடேஜாவை டம்மியாகவே வைத்துள்ளனர் எனவும் புகார் எழுந்தது. இதற்கிடையே தோனி மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்றார். அவர் கேப்டனான பின்னும் வெற்றி தோல்வி என சந்தித்துவருகிறது சென்னை அணி.
இந்நிலையில் டெல்லி அணிக்கு எதிராக அண்மையில் நடந்த போட்டியில் ஜடேஜா விளையாடவில்லை. காயம் காரணமாக அவர் ஆடவில்லை எனக் கூறப்பட்டது. அடுத்த சில நாட்களில் காயம் காரணமாக அவர் இந்தத் தொடரிலிருந்தே விலகிவிட்டதாக அறிவிக்கப்பட்டது. ஜடேஜா உண்மையிலேயே காயத்தால்தான் விலகினாரா அல்லது கேப்டன் பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு விலகினாரா என கிரிக்கெட் வட்டாரத்தில் சந்தேக அலை வீசத் தொடங்கியுள்ளது.
மேலும் படிக்க | CSKவுக்கு ஜடேஜாவைக் கேப்டனாக்குனதுதான் தப்பாம்!- சொன்னது யார் தெரியுமா!?
இந்நிலையில் இவ்விவகாரம் அடுத்தகட்டத்துக்குச் சென்றுள்ளது. அதாவது, சென்னை அணியின் இன்ஸ்டகிராம் பக்கத்தில் ரவீந்திர ஜடேஜா அன்ஃபாலோ செய்யப்பட்டுள்ளதாக சிலர் கூறத்தொடங்கியுள்ளனர். அது தொடர்பான சில பதிவுகளும் இணையத்தில் தற்போது வைரல் ஆகிவருகின்றன.
முன்னதாக சென்னை அணியில் இருந்து சுரேஷ் ரெய்னா வெளியேறியதற்கான உண்மையான காரணம் இன்றுவரை மர்மமாகவே இருந்துவரும் நிலையில் ஜடேஜாவின் இவ்விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மேலும் படிக்க | கேப்டன்சியில் தோனி தலையிடுவதாக ஜடேஜா புகார்: CSKவுக்குள் புது பூகம்பம்?!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR