கிராண்ட் ஸ்லாம் வென்ற முதல் இந்திய பெண் டென்னிஸ் வீரர் சானியா மிர்சா, துபாய் ஓபனில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டதுடன் தொழில்முறை டென்னிஸிலிருந்து ஓய்வு பெற்றார். கடந்த மாதம், இந்திய டென்னிஸ் வீரர் ரோஹன் போபன்னாவுடன் ஆஸ்திரேலிய ஓபனில் கலப்பு இரட்டையர் போட்டியின் இறுதிப் போட்டியில் கலந்துக் கொண்ட சாய்னா, துபாய் நிகழ்வுக்குப் பிறகு அவர் ஓய்வு பெறப் போவதாக அறிவித்திருந்தார். அதன்படி, நேற்றைய போட்டியுடன் சானியா மிர்சாவை ஓய்வு பெற்றார்.
இந்தியாவில், டென்னிஸில் பெண்களுக்கான ஆதர்ச நாயகியாக விளங்கும் வீராங்கனை சானியா மிர்சா, 2003 இல் தனது தொழில்முறை டென்னிஸ் வாழ்க்கையைத் தொடங்கினார், இந்த இருபது ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையில் பல்வேறு ‘முதல்’ சாதனைகளை நிகழ்த்திய நாயகி சானியா மிர்சா.
ஆறு முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை பெற்ற சானியாவின் 20 ஆண்டுகால சாதனைகளில் டாப் 5 சாதனைகள் இவை.
மேலும் படிக்க | WPL 2023: கிரிக்கெட் ‘மெண்டர்’ ஆகும் டென்னிஸ் வீராங்கனை! மாத்தி யோசிக்கும் RCB
WTA பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்
17 வயதில் சானியா மிர்சா போட்டி டென்னிஸுக்குள் நுழைந்தபோது, 2004 ஆம் ஆண்டில் WTA பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண்மணி என்ற சாதனைப் பதிவை ஏற்படுத்தினார். இந்த சாதனையை யாருமே முறியடிக்க முடியாதே?
கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற முதல் இந்திய பெண்
தனது இரண்டு தசாப்த கால டென்னிஸ் வாழ்க்கையில், சானியா மிர்சா ஆறு கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ளார். அவர் முதன்முதலில் வரலாற்றை உருவாக்கியது சக இந்திய டென்னிஸ் ஜாம்பவான் மகேஷ் பூபதியுடன் சேர்ந்து என்பது குறிப்பிடத்தகக்து.
Welcome to retirement @MirzaSania you outdid yourself time and time again both on and off the court …. Proud of you !! pic.twitter.com/xNzIykOIqH
— Mahesh Bhupathi (@Maheshbhupathi) February 21, 2023
2009 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் கலப்பு இரட்டையர் பட்டத்தை வென்ற முதல் இந்தியப் பெண் சானியா மிர்சா,. பின்னர் அவர் 2012 இல் பூபதியுடன் பிரெஞ்சு ஓபன் கலப்பு இரட்டையர் வென்றார்.
2014 ஆம் ஆண்டில், சானியா புருனோ சோரெஸுடன் கூட்டு சேர்ந்து யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் பட்டம் வென்றார். அதன்பிறகு, மார்ட்டினா ஹிங்கிஸுடன் கூட்டு சேர்ந்து விம்பிள்டன் மற்றும் யுஎஸ் ஓபன் 2015 மற்றும் 2016 இல் ஆஸ்திரேலிய ஓபனில் மகளிர் இரட்டையர் கோப்பையை சென்றார் இந்திய நட்சத்திரம் சானியா மிர்சா.
உலக நம்பர் 1 ஆக இருக்கும் முதல் இந்திய பெண்
2015 ஆம் ஆண்டில் ஒற்றையர் அல்லது இரட்டையர் WTA தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த முதல் இந்திய பெண்மணி சானியா ஆனார். அவர் உலக நம்பர் 1 ஆக 91 வாரங்கள் இருந்தார். தனது டென்னிஸ் வாழ்க்கையில் மொத்தம் 43 டபிள்யூ.டி.ஏ இரட்டையர் பட்டங்களை வென்றார்.
மேலும் படிக்க | IND vs AUS: கேஎல் ராகுலுக்கு செக் வைத்த பிசிசிஐ! அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்
WTA இன் சிறந்த 30 ஒற்றையர் தரவரிசையில் நுழைந்த முதல் இந்திய பெண்
WTA ஒற்றையர் தரவரிசையில் முதல் 50 இடங்களைப் பிடித்த முதல் இந்திய பெண் சானியா மிர்சா ஆவார். இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா ஏப்ரல் 2015 இல் WTA இரட்டையர் தரவரிசையில் நம்பர் 1 ஆக உயர்ந்தார், வரலாற்றில் உச்சநிலையை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஒற்றையர் பிரிவில் கிராண்ட் ஸ்லாம்ஸை எட்டிய முதல் இந்திய பெண்
2005 ஆம் ஆண்டில், சானியா மிர்சா யுஎஸ் ஓபனில் நான்கு சுற்றுகளை அடைந்து, கிராண்ட்ஸ்லாம் நிகழ்வின் ஒற்றையர் போட்டியில் நான்காவது சுற்றை எட்டிய முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பெற்றார். அவரது ஒற்றையர் பட்டம் வெல்லும் கனவு, மரியா ஷரபோவாவால் முறியடிக்கப்பட்டது.
கிரிக்கெட்டிலும் சானியா மிர்சா
சானியா மிர்சா இப்போது தனது வாழ்க்கையில் மற்றொரு அத்தியாயத்தைத் தொடங்க உள்ளார். இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கும் மகளிர் பிரீமியர் லீக்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கான வழிகாட்டியாக செயல்பட இருக்கிறார் சானியா மிர்சா.
மேலும் படிக்க | IPL 2023: முக்கிய வீரர் மீண்டும் காயம்! சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ