IPL 2020 FINAL: ரோஹித் 3 சாதனைகள் செய்ய வாய்ப்பு; பொல்லார்ட் 200வது சிக்ஸரை அடிக்கலாம்

ஐபிஎல் 2020 இறுதிப் போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) பல சாதனைகளை படைக்க உள்ளார். 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கீரன் பொல்லார்ட் இடம் பெற வாய்ப்பு.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 10, 2020, 06:24 PM IST
  • ரோஹித் சர்மா தலைமையின் கீழ், நான்கு முறை மும்பை அணியை சாம்பியனாகியுள்ளது.
  • இன்றைய ஆட்டத்தில் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் பொல்லார்ட் இணையலாம்.
  • 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை ரோஹித் சர்மா பெறுவார்.
IPL 2020 FINAL: ரோஹித் 3 சாதனைகள் செய்ய வாய்ப்பு; பொல்லார்ட் 200வது சிக்ஸரை அடிக்கலாம் title=

IPL Final Mumbai vs Delhi: இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல் 2020) இறுதிப் போட்டி துபாயில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 10) மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) மற்றும் டெல்லி கேப்பிடல் (Delhi Capitals) இடையே நடைபெறுகிறது. இந்த போட்டியில் மும்பை கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) பல சாதனைகளை படைக்க உள்ளார். இறுதிப் போட்டியில் ரோஹித் வெற்றி பெற்றால், அது அவரது ஐந்தாவது சாம்பியன் பட்டமாகும். அவரது தலைமையின் கீழ், நான்கு முறை மும்பை அணியை சாம்பியனாக்கியுள்ளார். அதிக முறை IPL பட்டத்தை வென்ற கேப்டன் ரோஹித் சர்மா. அவரைத் தொடர்ந்து மகேந்திர சிங் தோனி (3) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ரோஹித் ஐந்து முறை ஐ.பி.எல். பட்டத்தை வென்றுள்ளார். மும்பைக்கு நான்கு முறை மற்றும் 2009-ல் டெக்கான் சார்ஜர்ஸ் (Hyderabad Deccan Chargers) அணிக்கு ஒரு முறை என மொத்தம் ஐந்து முறை. டெல்லிக்கு எதிரான இறுதிப் போட்டியில் நுழைந்தவுடன் ரோஹித் மற்றொரு சாதனை நிகழ்த்துவார். 200 ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார். இந்த விஷயத்தில் தோனி (MS Dhoni) அவருக்கு முன்னால் இருக்கிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) கேப்டன் இதுவரை 204 போட்டிகளில் விளையாடியுள்ளார். மும்பை அணிக்காக 4000 ரன்கள் அடைவதில் ரோஹித் இன்னும் எட்டு ரன்கள் தூரம் மட்டுமே உள்ளார். இந்த போட்டியில் அவர் இந்த சாதனையை படைக்க முடியும்.

ALSO READ | சுவாராசியமான TOP 5 IPL CONTROVERSIES உங்களுக்குத் தெரியுமா?

கேப்டனாக மற்றொரு சாதனை படைக்க ரோஹித் நெருக்கமாக உள்ளார். அதாவது ஒரு கேப்டனாக 3000 ரன்கள் எடுக்க இன்னும் 43 ரன்கள் மட்டுமே தேவை. அவருக்கு முன், விராட் கோலி, மகேந்திர சிங் தோனி, கவுதம் கம்பீர் ஆகியோர் அந்த பட்டியலில் உள்ளனர். 

ரோஹித் சர்மாவை தவிர, கீரன் பொல்லார்ட் (Kieron Pollard) சாதனை பட்டியலில் இடம் பெற உள்ளர். ஐ.பி.எல். தொடரின் 163 போட்டிகளில் இதுவரை 198 சிக்ஸர்களை பொல்லார்ட்டின் பெயரில் உள்ளது. அவர் இன்றைய ஆட்டத்தில் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைவார். 200 சிக்ஸர் அடித்த ஆறாவது பேட்ஸ்மேன் என்ற பெருமையும் பெறுவார்.

ALSO READ | IPL 2020 பட்டத்தை Delhi Capitals வெல்லும் என அடித்துச் சொல்லும் வரலாறு? சரித்திரம் திரும்புமா?

அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் கிறிஸ் கெய்ல் (349), ஏபி டிவில்லியர்ஸ் (235), தோனி (215), ரோஹித் (209), கோஹ்லி (201) ஆகியோர் இந்த சாதனையை எட்டியுள்ளனர். மறுபுறம், டெல்லி அணியின் தொடக்க வீரர் ஷிகர் ( Shikhar Dhawan) தவான் ஒரு சாதனை செய்யலாம். ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணிக்காக 1500 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக மாறலாம். இதற்காக தவனுக்கு 36 ரன்கள் தேவைப்படுகின்றன. அதே நேரத்தில், இந்த சீசனில் 500 ரன்கள் எடுக்க ஸ்ரேயாஸ் ஐயர் (Shreyas Iyer) இன்னும் 46 ரன்கள் தேவை.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News