புதுடெல்லி: அரசாங்கத்தின் தலையீடு காரணமாக இலங்கை கிரிக்கெட்டின் உறுப்பினர் பதவியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெள்ளிக்கிழமை சஸ்பெண்ட் செய்தது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (International Cricket Council (ICC)) வாரியத்தின் இந்த முடிவு உடனடியாக அமலுக்கு வந்தது. எனவே, இனி இலங்கை கிரிக்கெட் அணி ஐசிசியின் உறுப்பினர் கிடையாது. இந்த செய்தி கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கான காரணம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
நேற்று (2023 நவம்பர் 11) நடைபெற்ற ஐ.சி.சி வாரியத்தின் கூட்டத்தில், ஸ்ரீலங்கா கிரிக்கெட் ஒரு உறுப்பினர் (Sri Lanka Cricket’s Membership) என்ற வகையில் அதன் கடமைகளை சரிவர நிர்வகிக்கவில்லை என்று முடிவு செய்தது. குறிப்பாக, அதன் விவகாரங்களை தன்னாட்சி முறையில் நிர்வகிக்க வேண்டும் என்ற விதிகள் மோசமாக மீறப்பட்டிருப்பதாக முடிவு செய்தது.
ICC SUSPENDS SRI LANKAN CRICKET BOARD MEMBERSHIP....!!!!
Sri Lanka won't be able to take part in any ICC events until ICC uplifts the ban. pic.twitter.com/B6r1kl3YJL
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 10, 2023
ஐசிசியின் விதிமுறைகளின் படி, இந்த சர்வதேச கிரிக்கெட் வாரியத்தில் அங்கம் வகிக்கும் உறுப்பு அமைப்புகள், அதன் நிர்வாகம், ஒழுங்குமுறை மற்றும்/அல்லது நிர்வாகத்தில் அரசாங்கத்தின் தலையீடு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால், இலங்கையில் கிரிக்கெட் அமைப்பின் நிர்வாகத்தில் இலங்கை அரசு தலையீடு மிகவும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது.
மேலும் படிக்க | அடுத்த ஹர்திக் பாண்டியா இவர்கள்தான்... இந்தியாவின் ஆல்ரவுண்டர் பஞ்சம் போகுமா...?
ஐசிசி வாரியத்தின் சஸ்பெண்ட் நிபந்தனைகள் என்ன?
2023 ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு தகுதி பெறாமல் இலங்கை வெளியேறியது. அதற்கு அடுத்த நாளே கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது, ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த சஸ்பெண்ட் உத்தரவு ரத்தாகும் வரை இனி, இலங்கையால் எந்தவொரு சர்வதேச போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.
மூன்று நாட்களுக்கு முன்னர் நவம்பர் 7 ஆம் தேதி, உலகக் கோப்பையில் இலங்கை அணியின் மோசமான ஆட்டத்தைத் தொடர்ந்து முழு SLC வாரியமும் நீக்கப்பட்டது, இப்போது ஐசிசியின் சஸ்பெண்ட் நடவடிக்கை இலங்கை கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும்.
நடப்பு ஐசிசி உலகப்கோப்பைப் போட்டித் தொடரில் தொடர் தோல்வியால் இலங்கை அணி நிலைகுலைந்து போனது. எனவே, அதற்கு பொறுப்பேற்கும் வகையில், இலங்கை கிரிக்கெட் வாரியத்தின் (Sri Lanka Cricket) செயலாளர் மோகன் டி செல்வா நவம்பர் ஐந்தாம் தேதியன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அதையடுத்து, இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணதுங்க (Roshan Ranatunga) இலங்கை கிரிக்கெட் வாரியத்தை ஒட்டுமொத்தமாக கலைத்துவிட்டு, 7 பேர் கொண்ட இடைக்கால வாரியக் குழுவையும் அவர் அமைத்துள்ளார்.
1996ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இலங்கை அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்த அப்போதைய கேப்டன் அர்ஜூன ரணதுங்க (Arjuna Ranatunga) இலங்கை கிரிக்கெட் தொடர்பான இந்த இடைக்கால வாரியக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏழு பேர் கொண்ட இடைக்கால குழுவில் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி, முன்னாள் இலங்கை கிரிக்கெட் வாரியத் தலைவர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். இந்த நிலையில், இலங்கை வாரியத்தை ஐசிசி சஸ்பெண்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ