ஜிம்பாப்வே ஒருநாள் போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ்

Last Updated : Jun 15, 2016, 06:04 PM IST
ஜிம்பாப்வே ஒருநாள் போட்டித்தொடரை 3-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் title=

மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாட டோணி தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே வந்ததுள்ளது.

ஹராரேயில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயை வென்றது. அதே மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒரு நாள் போட்டியில்  இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேவை வீழ்த்தியது 

ஹராரே மைதானத்தில் இன்று நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினார். ஜிம்பாப்வே அணியில் உசி சிபாண்டா அதிகபட்சமாக 38 ரன்களை எடுத்தார்.ஜிம்பாப்வே அணி 43 ஓவரில் 123 ரன்களில் ஜிம்பாப்வே ஆல்-அவுட் ஆனது. இந்திய வீரர் பும்ரா அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட் செய்தது. இறுதியில் 21.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது இந்தியா. லோகேஷ் ராகுல் 63 ரன்களுடனும், ஃபைஸ் ஃபஸல் 55 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Trending News