சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திடீர் மழை!

சென்னை மற்றும் வட தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!

Last Updated : Jun 7, 2018, 11:41 AM IST
சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய திடீர் மழை! title=

சென்னை மற்றும் வட தமிழகத்தில் பரவலாக மழை பொழிந்து வருவதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!

தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் பரவலாக மழை பொழிந்து வருகின்றது. தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என மக்கள் எதிர்பார்த்திருக்கும் நிலையில் நேற்ற திடீரென பலத்த மழை பொழிந்தது. இதனால் சுட்டெரிக்கும் வெப்பத்தின் தாக்கம் சற்றே குறைந்து மக்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது.

குறிப்பாக சென்னையில் நேற்று ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, தியாகராய நகர், மயிலாப்பூர், திருவான்மியூர் உள்ளிட்ட இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பொழிந்தது.

இதேபோல், காஞ்சிபுரம், புதுக்கோட்டை, கும்பகோணம் உள்ளிட்ட தமிழகத்தின் பிற பகுதிகளிலும பரவலாக மழை பொழிந்தது. 

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கையில், வங்க கடலில் மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 2 நாட்களுக்கு மிதமான மழை பொழிய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது!

Trending News