பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹ 1 லட்சம்: EPS

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலவர் உத்தரவு..... 

Last Updated : Jan 12, 2019, 12:47 PM IST
பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ₹ 1 லட்சம்: EPS title=

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் நிதியுதவி வழங்க தமிழக முதலவர் உத்தரவு..... 

தமிழக முதலவர் எடப்பாடி பழனி தமிழகத்தில் பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ 1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாகப்பட்டினம் மாவட்டம், சீர்காழி வட்டம், வாணகிரி கிராம கடல் பகுதியில் குளிக்கச் சென்ற நாகப்பட்டினண் மாவட்டத்தைச் சேர்ந்த தனியாந் கல்லூரி மாணவிகள், திரு. ராஜாராண் என்பவரின் மகள் செல்வி விவேகா, திரு. லோகநாதன் என்பவரின் மகள் செல்வி மஞ்சு மற்றுண் கடலூந் மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சிவக்குமாந் என்பவரின் மகள் செல்வி சிவப்பிரியா ஆகிய மூன்று மாணவிகள் கடல் அலையில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;  

அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், திருமானூர் கிராமத்தைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியன் என்பவரின் மகன் சிறுவன் ஜெயசூந்யா என்பவர் கொள்ளிடம் ஆற்றில் குளிக்கச் சென்ற போது, நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம், செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. கென்னடி என்பவரின் மகன் செல்வன் ரிஷோந் மற்றும் திரு. செல்வன் என்பவரின் மகன் செல்வன் சந்தியாகு இராயப்பன் ஆகிய இருவருண் கடலில் குளிக்கச் சென்ற போது, கடல் அலையில் சிக்கி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டண், கெண்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திரு. உச்சப்பா என்பவரின் மகன் திரு. ராஜப்பா என்பவந் தேனீக்கள் கொட்டியதில் உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டண், கஞ்சனூந் கிராமத்தைச் சேர்ந்த திரு. பழனியப்பன் என்பவரின் மகன் திரு. கணேசன் என்பவந் பனைமரத்தில் பதநீர் சேகரிக்க ஏறும் போது மரத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றசெய்தியையும்;

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரண் வட்டம், புளியமரத்துக்கோட்டைகிராமம், கொடன்கிபட்டியை சேர்ந்த திரு. மோகனசு சுந்தரம் என்பவரின் மகள் சிறுமி சபீதா கிணற்றில் தவறி விழுந்ததை அறிந்த திருமதி சுமதி என்பவர் தன் இடுப்பில் வைத்திருந்த கைக் கைகுழந்தையை தீபிகாவுடன் காப்பாற்ற முயன்றபோது மூவருண் கிணற்று நீரில் மூழ்கி உயிரிழந்தார்' என்ற என்ற செய்தியையுண்;
 
கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டம், வெள்ளிச்சந்தையை சேர்ந்த திரு. திருமால் என்பவரின் மகன் திரு. அய்யாவு என்பவந் தென்னை மரம் ஏறும் போது, கடந்தைகள் கொட்டி உயிரிழந்தனர் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை வட்டம், முல்லையூந் கிராமத்தைச் சேர்ந்த திரு. முத்துக்கருப்பன் என்பவரின் மகள் சிறுமி கீந்த்தனா என்பவர் குட்டையில் மூழ்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

பொன்னமராவதி வட்டம், செவலூர் கிராமம், செவலூர் விளக்கு அருகில் அரசுப் பேருந்தும், இரு சக்கர வாகனமும் மோதிய விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த திரு. ராமன் என்பவரின் மகன் திரு. பாலசுப்பிரமணியன் மற்றுண் திரு. செல்லையா என்பவரின் மகன் திரு. வினோத் ஆகிய இருவருண் உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன். 

பல்வேறு நிகழ்வுகளில் உயிரிழந்த 15 நபந்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மேற்கண்ட சம்பவங்களில் உயிரிழந்த 15 நபந்களின் குடுண்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்' என குற்ப்பிட்டுள்ளார்.  

 

Trending News