ஜனநாயகக் கடமை ஆற்றிய 103 வயது முதியவர்!

103 வயதான முதியவர், சூலூர் தொகுதியில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.

Last Updated : May 19, 2019, 11:02 AM IST
ஜனநாயகக் கடமை ஆற்றிய 103 வயது முதியவர்! title=

103 வயதான முதியவர், சூலூர் தொகுதியில் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தார்.

 

 

தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகின்றது. பொதுமக்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூலூர் தொகுதியை மூத்த வாக்காளர் பச்சன் சிங் ஆவார். இவருக்கு வயது 103 ஆகும். இந்த முதியவர் இன்று வாக்குச் சாவடி மையத்துக்கு அழைத்து வரப்பட்டார். தள்ளாத வயதிலும் வாக்களிப்பதை கடமையாக கொண்டு வாக்களிக்க இந்த முதியவரை அங்கிருந்த மக்கள் பாராட்டினர்.

Trending News