முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 113ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், 700 கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார். இதேபோல், 75ஆவது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியது.
மேலும் படிக்க | தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் வளர்ச்சி அதிகரிக்கும்: ஜே.பி நட்டா
அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைகளில் நீண்ட நாட்களாக இருக்கும் கைதிகளில் விடுதலை செய்வதற்கு தகுதியானவர்களை அடையாளம் காண விதிமுறைகள் வகுக்கப்பட்டன. இதில், பல்வேறு வழக்குகளில் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் சிறையில் உள்ள கைதிகளில் நன்னடத்தையுடன் இருப்பவர்களை விடுதலை செய்யவும், பாலியல் துன்புறுத்தல், பயங்கரவாத குற்றங்கள், கடத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டவர்கள் விடுதலை பெற தகுதியற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.
படிப்படியாக விடுவிப்பு
இதையடுத்து, முன்விடுதலையாகும் கைதிகளின் விவரங்களை சிறைத்துறை டிஜிபி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் இறுதியான கைதிகளை முன்விடுதலை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து மாநிலம் முழுவதும் 9 மத்திய சிறைகளில் இருந்து தேர்வான கைதிகள் படிப்படியாக விடுதலை செய்யப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக புழல் மத்திய சிறையில் இருந்து 12 கைதிகள் இன்று காலை முன் விடுதலை செய்யப்பட்டனர். தண்டனை சிறையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக அடைக்கப்பட்டு நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டவர்களுக்கு மளிகை தொகுப்பு பொருட்கள், சிறையில் பணியாற்றியதற்கான ஊதியம் வழங்கப்பட்டது. முன்விடுதலை செய்ய பரிந்துரைக்கப்பட்ட பிற கைதிகள் வரும் நாட்களில் படிப்படியாக விடுவிக்கப்படுவார்கள் என்று சிறைத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | இசுலாமிய அமைப்புக்களின் மீது ஒன்றிய அரசின் அடக்குமுறை! வைகோ கண்டனம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ