கொரோனா 2வது அலையால் தமிழகத்தில் 3,070 போலீசார் பாதிப்பு- காவல்துறை

மேலும் தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலையால் இதுவரை 3,070 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 13, 2021, 02:17 PM IST
கொரோனா 2வது அலையால் தமிழகத்தில் 3,070 போலீசார் பாதிப்பு- காவல்துறை title=

கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. தமிழகமும் அந்த பாதிப்பில் இருந்து தப்பவில்லை. தமிழகத்தில் தற்போது ஒரு லட்சம் பேர் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளனர். 

தினசரி தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டுகிறது. கொரோனா வைரஸால் (Coronavirus) பாதிக்கப்படுபவர்கள் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மூச்சுத் திணறலால் உயிரிழப்பதே அதிகமாக உள்ளது. இதனால் நாடெங்கும் ஆக்சிஜன் தேவை அதிகரித்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் பொருட்டு அனைவரும் நிதியுதவி செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

ALSO READ | ஒரு நாளைக்கு 20000 ரெம்டெசிவிர் மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: முதல்வர் வலியுறுத்தல்!

மறுபுறம் கொரோனா பாதிப்பின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கில் (Lockdown) அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் இந்த தொற்று பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் நாள்தோறும் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இரண்டாம் அலையில் மட்டும் இதுவரை 3,070 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 70 காவலர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர். மேலும், 1,722 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News