4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான MNM கட்சி வேட்பாளர்கள் வெளியீடு!

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!!

Last Updated : Apr 28, 2019, 06:46 PM IST
4 சட்டமன்றத் தொகுதிகளுக்கான MNM கட்சி வேட்பாளர்கள் வெளியீடு! title=

4 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு!!

தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டப்பேரவைத் தொகுதிகளில், 18 தொகுதிகளுக்கு மட்டும் மக்களவைத் தேர்தலோடு சேர்ந்து கடந்த வியாழக்கிழமை தேர்தல் நடைபெற்றது. மீதமுள்ள ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் தொகுதிகளுக்கான தேர்தல் மே 19 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை துவங்கியது. அந்தத் தொகுதிகளுக்கு உள்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளின் அலுவலகங்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மனு தாக்கல் செய்யலாம். பொது வேட்பாளர் என்றால் ரூ.10 ஆயிரமும் ஆதிதிராவிடர் வேட்பாளர் என்றால் ரூ.5 ஆயிரமும் கட்டி மனு அளிக்க வேண்டும். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஏப்ரல் 29 ஆம் தேதி ஆகும். வேட்பு மனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 30 ஆம் தேதி நடைபெறும். மனுக்களைத் திரும்பப் பெற மே 2 ஆம் தேதி கடைசி நாளாகும். மே 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று மே 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். 

இந்நிலையில், தமிழகத்தின் அரசியல் கட்சிகள் 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான வேராலர்களை அறிவித்து வருகின்றனர். இதை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் 4 தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 

வேட்பாளர்கள் விவரம்:- 

திருப்பரங்குன்றம் - சக்திவேல்

சூலூர் - ஜி.மயில்சாமி

அரவக்குறிச்சி - எஸ்.மோகன்ராஜ்

ஒட்டப்பிடாரம் - எம்.காந்தி 

 

Trending News