சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக MLA-கள் பதவியேற்பு!!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் பதவியேற்பு!!

Last Updated : May 29, 2019, 10:16 AM IST
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக MLA-கள் பதவியேற்பு!!

சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வென்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் 9 பேர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் பதவியேற்பு!!

2019 மக்களவைத் தேர்தலில் பாஜக, பாமக, தேமுதிக, தாமக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது அதிமுக, வேலூரை தவிர்த்து தமிழகத்தில் 38 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்றது. கூட்டணி கட்சியுடன் சேர்ந்து இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட 21 தொகுதிகளில் அதிமுக வெறும் 18.48% வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வியை அக்கட்சி அடைந்துள்ளது. 

இந்நிலையில், தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் 22 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 9 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில், சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சூலூர், நிலக்கோட்டை, விளாத்திகுளம், பரமக்குடி, மானாமதுரை, சோளிங்கர், சாத்தூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் தொகுதி உறுப்பினர்கள் இன்று பதவியேற்றனர். எம்.எல்.ஏக்கள் 9 பேர் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ் முன்னிலையில் பதவியேற்பு- சபாநாயகர் தனபால் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 

 

More Stories

Trending News