மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் - எச். ராஜா மீது காவல்நிலையத்தில் புகார்

வன்முறையை தூண்டும் வகையில் எச். ராஜா தொடர்ந்து பேசி வருவதால் அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என அனைத்திந்திய மாணவர் புகார் அளித்துள்ளனர். 

Written by - Shiva Murugesan | Last Updated : Jan 4, 2020, 08:14 PM IST
மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் - எச். ராஜா மீது காவல்நிலையத்தில் புகார் title=

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (CAA) எதிராக நாடு முழுவதும் பல போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதுவும் குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கர்நாடகா போன்ற மாநிலங்களில் மாணவர்கள், பொதுமக்கள் உட்பட அரசியல் கட்சிகளும் போரட்டத்தில் ஈடுபட்டன. பல இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. அதில் மாணவர்கள் போலீசார் மீது கல் எறிந்தார்கள் என குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. அதை மேற்கோள் காட்டி பேசிய பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா, வருகிறது. மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் என மிரட்டல் விடுக்கும் வகையில், சட்டத்துக்கு புறம்பாக பேசினார்.

அதாவது, அவர், "பள்ளி மற்றும் கல்லூரி வளாகத்தில் இருந்துக்கொண்டு கல் எறியலாம் என்று நினைக்காதே.. எப்படி வளாகத்தில் இருந்து கல் வெளியே வருகிறதோ.. அதே மாதிரி வெளியில் இருந்து குண்டு உள்ளே வரும்" என மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இவரின் இந்த பேச்சு பெரும் அதிர்ச்சி மற்றும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு பாதிக்கும் வகையிலும், தீவிரவாதத்தை தூண்டும் வகையிலும் பேசிய பாஜக தேசிய செயலாளர் எச்ச ராஜாவை கைது செய்யப்பட வேண்டும் என #ArrestHraja என்ற ஹெஷ்டேக் மூலம் நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்தநிலையில், அனைத்திந்திய மாணவர் மற்றும் இளைஞர் பெருமன்றம் சார்பில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடிய மாணவர்கள் மீது குண்டு வீசுவோம் எனக்கூறிய பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரில் வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து எச். ராஜாபேசி வருவதாகவும், இதனால் அவரை உடனடியாக கைதுசெய்ய வேண்டும் எனக் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது

Trending News