ரயிலில் செல்வோர் கவனத்திற்கு... துப்பட்டாக்களை வீசி நகைகள் கொள்ளை!

சென்னையில் ஓடும் ரயில்களில் துப்பட்டாக்களை வீசி நகைகளை கொள்ளை அடிக்கும் ரயில் சகோதரிகளை சென்னை மாம்பலம் ரயில்வே காவல்துறையினர் கைது செய்தனர்.

Written by - RK Spark | Last Updated : Sep 3, 2024, 01:17 PM IST
ரயிலில் செல்வோர் கவனத்திற்கு... துப்பட்டாக்களை வீசி நகைகள் கொள்ளை! title=

கடந்த மாதம் 7 ஆம் தேதி கடலூரைச் சேர்ந்த வாசுகி என்பவர் சைதாப்பேட்டையில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு புறநகர் ரயில் மூலமாக சொந்த ஊருக்கு சென்று கொண்டிருந்துள்ளார் . அப்போது சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் ரயில் ஏறும் பொழுது தனது 17 கிராம் தங்க நகையை கூட்டத்தில் உள்ள பெண்கள் யாரோ திருடி சென்றதாக சென்னை மாம்பலம் ரயில்வே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் புறநகர் ரயில் கூட்டமாக வந்ததாகவும் மகளிர் பெட்டியில் ஏறும் பொழுது தனது பின்புறம் கழுத்தையும் தோள்பட்டையும் யாரோ அழுத்தி பிடித்தவாறு ரயில் பெட்டிக்குள் தள்ளியதாக தெரிவித்துள்ளார். அதன் பின் ரயில் பெட்டியில் ஏறிய பின்பு தான் நகைகள் திருடு போனது அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக புகாரை தெரிவித்துள்ளார். இதுபோன்று தொடர்ந்து பெ ண் பயணிகளின் தங்க நகைகள் கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருடு போவதாக, சைதாப்பேட்டை மாம்பலம் கிண்டி போன்ற பல்வேறு ரயில் நிலைய காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்துள்ளன.

மேலும் படிக்க | தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் ஆட்சி.... திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

இது போன்று கடந்த சில நாட்கள் மட்டுமல்லாது பல வருடங்களாக பயணிகளின் தங்க நகைகளை பறித்துச் செல்வது யார் என கண்டுபிடிப்பது ரயில்வே காலல் துறையினருக்கு சவாலாக இருந்தது. இந்நிலையில் வாசியை அளித்த புகாரி அடிப்படையில் சிசிடிவி காட்சிகளில் அவைகளை திருடும் நபர்களின் காட்சிகள் பதிவாகி இருந்தது. ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் வீரர்கள் உதவியோடு தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். குறிப்பாக புகார்கள் வந்த காலகட்டத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து நகைகளை திருடுபவர்களை போலீசார் தேடி வந்தனர்.

 அப்போது ரயில் பெட்டியில் ஏறு போது பெண் பயணிகளின் மீது துப்பட்டாவை வீசி கூட்ட நெரிசலை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இரண்டு பெண்கள் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. குறிப்பாக உட்ட நெரிசலில் பெண்கள் சிக்கும் பொழுது அசைய முடியாத நேரத்தில், யாரும் கவனிக்காத போது துப்பட்டாவை வைத்து மறைத்து கழுத்தில் உள்ள தங்க நகைகளை திருடுவது தெரியவந்துள்ளது

சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக வைத்து விசாரணை மேற்கொண்ட போது புதுச்சேரி ரயில் நிலையத்தில் நகைகளை திருடி கைதான ஒசூரைச் சேர்ந்த கண்மணி, ரேகா சகோதரிகள் என கண்டுபிடிக்கப்பட்டது. இதை எடுத்து ஓடும் ரயிலில் திருடும் ரயில் சகோதரிகளான இருவரையும் போலீசார் கைது செய்தனர் இவர்களிடமிருந்து 12 கிராம் அளவிலான தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர். மேலும் விசாரணை செய்ததில் மாம்பழம் ரயில்வே காவல் நிலையத்தில் மட்டும் 14 திருட்டு வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்துள்ளது 

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வாரத்தில் திங்கள், புதன் வெள்ளி ஆகிய மூன்று நாட்களில் பொதுமக்கள் அதிகமாக வரும் நேரத்தில் நகைகளை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக பெண்கள் மீது துப்பட்டாவை வீசி ரயில் நகர்வதற்குள் நகைகளைத் திருடுவதில் கைதேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. சில நேரங்களில் நகைகளை திருடிக் கொண்டு ரயிலில் பயணித்து யாருக்கும் சந்தேக வராதபடி தப்பிச் செல்வதும் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட சகோதரிகள் இருவரையும் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மாம்பலம் ரயில்வே போலீசார் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

சென்னை புறநகர் ரயில்களில் மகளிர் பெட்டியில் கூட்ட நெரிசல்களை சாதகமாக பயன்படுத்தி துப்பட்டாவை வைத்து திருடிய ரயில் சகோதரிகள் இன்னும் எத்தனை வழக்குகளில் தொடர்பு உள்ளது. திருடிய நகைகளை என்ன செய்துள்ளார்கள் என்பது குறித்து காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். விரைவில் மீதம் உள்ள வழக்குகள் தொடர்பாகவும் அதில் திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்படும் எனவும் ரயில்வே போலீசார் தெரிவித்துள்ளனர். புறநகர் ரயில்களில் குறிப்பாக கூட்ட நெரிசலில் செல்லும் பெண்கள் தாங்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை பாதுகாப்புடன் அணிந்து செல்லுமாறு ரயில்வே போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க | தமிழகத்தில் பொம்மை முதலமைச்சர் ஆட்சி.... திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News