ஹெராயின் பறிமுதல்: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன்... அதிரடி காட்டும் என்ஐஏ

NIA Summons Varalakshmi Sarathkumar: விழிஞ்சம் கடற்கரை ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், ஆஜராக நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Aug 29, 2023, 01:44 PM IST
  • 300 கிலோ ஹெராயின் மற்றும் ஆயுதங்கள் கேரளாவில் சிக்கின.
  • மேலும் 13 பேர் கைதாகி அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கலானது.
  • 14ஆவது நபராக ஆதிலிங்கம் கைதானார்.
ஹெராயின் பறிமுதல்: நடிகை வரலட்சுமி சரத்குமாருக்கு சம்மன்... அதிரடி காட்டும் என்ஐஏ title=

NIA Summons Varalakshmi Sarathkumar: கேரள மாநிலம் விழிஞ்சம் கடற்கரை பகுதியில் ஹெராயின் மற்றும் ஏகே 47 துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட ஆதிலிங்கம், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் உதவியாளராக இருந்தது தெரிய வந்தது. இதனால் அவரை விசாரணைக்கு ஆஜராக தேசிய புலான்யவு முகமை (NIA) சம்மன் அனுப்பியுள்ளது. 

தமிழ்நாட்டின் திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர்கள், வெளிநாட்டவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போதைப் பொருள், ஆயுதங்கள் கடத்தலில் தொடர்புள்ளவர்கள்; இதன் மூலமான பணத்தை வைத்து இந்தியாவிலும் இலங்கையிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உயிர்ப்பிக்கின்றனர் என்ற தகவல் என்.ஐ.ஏ.வுக்கு கிடைத்தது. 

ஆதிலிங்கம் கைது

இந்நிலையில் கேரளாவின் விழிஞ்சம் துறைமுகத்தில் 300 கிலோ போதைப் பொருட்கள், ஆயுதங்கள் சிக்கிய சம்பவத்தில் இவர்களுக்கு தொடர்பிருப்பதும் விசாரணையில் தெரியவந்தது. இவ்வழக்கில் ஈழத்தை சேர்ந்த குணா, புஷ்பராஜ், அஸ்மின் உள்ளிட்ட 13 பேர் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். ஏற்கெனவே இலங்கை தமிழர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 14ஆவது நபராக ஆதிலிங்கமும் கைது செய்யப்பட்டார்.

மேலும் படிக்க | ஹெச். ராஜாவுக்கு எதிரான 11 வழக்குகள்... ரத்து செய்ய மறுத்த நீதிமன்றம் - அப்போ நெக்ஸ்ட்?

திரைத்துறையில் முதலீடா?

போதைப் பொருள் கடத்தல் கும்பலின் முக்கிய பிரமுகரான குணசேகரன் என்பவருடன் ஆதிலிங்கம் தொடர்பில் இருந்ததும், போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தை திரைத்துறையில் ஆதிலிங்கம் முதலீடு செய்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் நடிகை வரலட்சுமியிடம் ஆதிலிங்கம் உதவியாளராக இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனடியாக வர இயலாது

ஆதிலிங்கத்தின் முதலீடு மற்றும் செயல்பாடு குறித்த தகவல்களைத் திரட்டுவதற்காக நடிகை வரலட்சுமியை என்.ஐ.ஏ. விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி சம்மன் விடுத்துள்ளது. இது திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவில் படப்பிடிப்பில் இருப்பதால் உடனடியாக விசாரணைக்கு ஆஜராக இயலாது என என்.ஐ.ஏ. அதிகாரிகளிடம் வரலட்சுமி தெரிவித்துள்ளார். பிரபல நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி போடா போடி, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2, இரவின் நிழல் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. இவர் தமிழில் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.  

வேறு யாரேனும் சினிமாவில் உள்ளவர்களுக்கு தொடர்பு உள்ளதா எவ்வளவு பணத்தை ஆதிலிங்கம் சட்டவிரோதமாக மாற்றியுள்ளார் என்ற கோணத்திலும் விசாரணை விரிவடைந்திருப்பதாகவும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இந்த செய்தி திரைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | Video: ஓணம் பண்டிகைக்கு மலையாளத்தில் பேசி ஸ்டாலின் வாழ்த்து... 5 மாவட்டங்களுக்கு இன்று லீவ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News