கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
நேற்று கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கூறியதாவது:-
நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தின் 20 தொகுதிக்கான இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அப்படி நடத்தினால் பண விநியோகம் குறையும். இடைத்தேர்தல் எப்பொழுது வந்தாலும் நாங்கள் சாதிக்க தயாராக உள்ளோம். அதுக்குறித்து முழுவிவரம் மேலிடத்தில் கலந்து ஆலோசித்து பின்னர் தான் கூறமுடியும்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒவ்வொரு இந்துவின் எண்ணம். இதை வைத்து அரசியல் செய்யக்கூடாது. மீறி அரசியல் செய்தாலும், அதனால் எந்த பலனும் இல்லை.
சபரிமலை விவகாரத்தில் கேரளா அரசு அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. சபரிமலையை சுற்றுலா தளமாக மாற்ற கேரள அரசு முயற்சித்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சியின் கடைசி முதல்வர் பினராயி விஜயன் என்று சரித்தரத்தில் இடம் பெறுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.