'பல்லு பட்ற போகுது...' ஆபாசமாக பேசிய அண்ணாமலை...? குவியும் எதிர்ப்புகள்

Tamil Nadu Latest News: உதயநிதி ஸ்டாலின் சமீபத்தில் அளித்த நேர்காணல் குறித்து பேசும்போது ஆபாசமான வார்த்தையை பயன்படுத்தியதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Written by - Sudharsan G | Last Updated : Jan 19, 2024, 03:29 PM IST
  • பிரதமர் மோடியுடன் பாஜகவினரின் சந்திப்பு அரசியல் சந்திப்பு இல்லை - அண்ணாமலை
  • பல்லாவரம் பெண் கொடுமை விஷயத்தில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - அண்ணாமலை
  • முதல்வர் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் ஆளுநரை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார் - அண்ணாமலை
'பல்லு பட்ற போகுது...' ஆபாசமாக பேசிய அண்ணாமலை...? குவியும் எதிர்ப்புகள் title=

Tamil Nadu Latest News: சென்னை திருவான்மியூர் அருள்மிகு பாம்பன் குமரகுருதாசர் சுவாமி திருக்கோவிலில் பாஜக சார்பில் கோவில் சுத்தம் செய்யும் நிகழ்ச்சி இன்று (ஜன. 19) நடைபெற்றது. இந்நிகழ்வில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்று கோயிலை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டார். கோயில் பரிகாரம் சுற்றி உள்ள இடங்களை தண்ணீரை ஊற்றி சுத்தம் செய்தார். 

'எம்எல்ஏ மகனின் அராஜகம்!'

கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்கள் சந்தித்து பேசினார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,"அடுத்த 4 நாட்களுக்கு கோவில்கள், மசூதிகள், சர்ச்சுகள் உள்ளிட்ட 5000 மத வழிபாட்டு தலங்களில் பாஜக சார்பில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருக்கிறோம்.

அந்த வகையில் இன்று திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ குமரகுரு தாசர் சுவாமி திருக்கோவில் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டோம். பல்லாவரம் எம்எல்ஏ கருணாநிதியின் மகன் வீடு இந்த பகுதியில் தான் உள்ளது. ஒரு பெண்ணை கொடுமைப்படுத்தி இருக்கிறார்கள். தான் மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசையால் தான் வேலைக்கு வந்து இருக்கிறார். இதற்குப் பிறகும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் என்ன சமூக நீதி இருக்கிறது. 

மேலும் படிக்க | பழனியில் திருக்கல்யாணம், தைப்பூச தேரோட்டம் எப்போது? முழு விவரம் இதோ

'முதல்வரின் மலிவு அரசியல்'

நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் பாஜக களத்தில் இறங்கி போராடும். மூன்று மாதத்திற்கு ஒரு முறை ஆளுநரை திட்ட வேண்டும் என்று படத்தில் வருவது போல் திமுக திட்டம் வைத்துள்ளது. எங்கள் பேச்சைக் கேட்கவில்லை என்றால் இதுதான் நடக்கும் என்பது போல, சேலம் துணைவேந்தருக்கு திமுக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது போல் இருக்கிறது.

ஆளுநரை பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் துணைவேந்தரை கைது செய்து காவல்துறையை ஏவி இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். மலிவு அரசியல் செய்வது முதல்வரா, ஆளுநரா என முதல்வர் கண்ணாடியில் பார்க்க வேண்டும். முதல்வர் அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் ஆளுநரை அடிக்கடி வம்புக்கு இழுக்கிறார் என்பது எங்கள் பார்வை.

பிரதமருடனான பாஜகவினரின் சந்திப்பு, அரசியல் சந்திப்பு இல்லை. கூட்டணி குறித்து தலைமை முடிவெடுக்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என மக்கள் நினைப்பதே முதல் வெற்றி" என்றார்.

மேலும் படிக்க | திமுகவுக்கு செக் வைக்க அண்ணாமலை எடுத்த ஆயுதம்..! 3 வாரத்தில் ரிலீஸாகும் 2ஜி ஆடியோ....

அண்ணாமலைக்கு குவியும் கண்டனம்

பிரதமர் மோடி வருகைக்கு (PM Modi TN Visit) எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பலூன்கள் பறக்க விடுவோம் என காங்கிரஸார் தெரிவித்தது குறித்த கேள்விக்கு,"சில பேர் அட்டேன்சன் சீக்கர்(விளம்பர பிரியர்கள்). காங்கிரஸில் தலைவர்கள் இருக்கிறார்கள். ஆனால் தொண்டர்கள் இல்லை" என்றார். 

சமீபத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனியார் செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,"'பார்த்து பக்குவமாக பல்லு பட்ற போகுது' என்பது போல் ஃப்ரெண்ட்லி கேள்விகளை கேட்டிருக்கிறார் நெறியாளர்" என பதிலளித்தார்.

இந்த பதிலுக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. பாஜக போன்ற பெரிய கட்சியின் மாநில தலைவர் இப்படி பொதுவெளியில் அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசுவது கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ராமர் கோவில் கட்டப்பட்டது எப்படி?

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதல்வர் என ஆரம்பித்ததே திமுகவினர்கள்தான். 38 கேள்விகள் அந்த நேர்காணலில் கேட்கப்பட்டிருந்தது ஆனால் முக்கியமான கேள்விகள் எதுவும் இடம்பெறவில்லை. அவர் அளித்த பேட்டியைப் பற்றி பேசி பாஜக தரம் தாழ்த்த விரும்பவில்லை. படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோவில் என்பது போல திமுக ஆட்சிக்கு வந்ததுடன் பல கோவில்களை இடித்தனர்.

இஸ்லாமியர் உட்பட அடங்கிய ஐந்து நீதிமன்ற அமர்வில் அளிக்கப்பட்ட தீர்ப்பில் இரு சமூகத்தினருக்கும் நீதி வழங்கப்பட்டு மக்களின் பணத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. நானும் எனக்கு முன்பிருந்த தலைவர்களும் பாஜக வளர்ச்சிக்காக நலனுக்காக தொடர்ந்து உழைத்து வருகிறோம்" என்றார்.

மேலும் படிக்க | தேர்தலுக்கு ரெடியாகும் திமுக... 3 குழுக்கள் அமைப்பு - யார் யாருக்கு என்ன பொறுப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News