நடிகர் கமல்ஹாசன் நேற்று புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இதை முன்னிட்டு நேற்று காலை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் வீட்டிலிருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கிய அவர், அடுத்தடுத்த ஊர்களுக்கு சென்று மக்களை சந்தித்தார்.
அதையடுத்து மதுரையில் நடைபெற்று வரும், அவரது கட்சியின் முதல் அரசியல் மாநாட்டில், உரையாற்றினார்.அப்போது கமல் கட்சிக் கொடியை ஏற்றி, கட்சியின் பெயரை அறிவித்தார். கமல்ஹாசனின் கட்சிப் பெயர் மக்கள் நீதி மய்யம் என தெரிவித்தார். அவரது கொடி வெள்ளை நிறத்திலும், அதில் 6 இணைந்த கைகளை கொண்டுள்ளது.
அதில் 3 கைகள் வெள்ளை நிறத்திலும், 3 கைகள் சிவப்பு நிறத்திலும் காணப்படுகிறது. அதற்குள் வெள்ளை நட்சத்திரத்தை சுற்றி கருப்பு நிற வளையம் அதற்குல் வெள்ளை நிற நட்சத்திரம் இருப்பதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
நாம் கனவு காண்கிறோம். ஒரு புதிய கட்சி, ஒரு புதிய பாதை, ஒரு புதிய கொள்கை. ‘மக்கள் நீதி மய்யம்’
தமிழகம் விழித்தெழட்டும்.#மய்யம் #மக்கள்_நீதி_மய்யம்official website: https://t.co/cql8kgqGkk
fb: https://t.co/2Gz1xRg5vf
twitter: https://t.co/J9ywXrunOb pic.twitter.com/pmq5wTGbwL— Kamal Haasan (@ikamalhaasan) February 21, 2018