சென்னை: வரும் 16-ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் (TN School) திட்டமிட்டபடி திறக்கப்படுமா? அல்லது தள்ளிவைக்கப்படுமா? என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில், கொரோனா (COVID-19) நோய்தொற்று காரணமாக மூடப்பட்டிந்த பள்ளிகள் தமிழகத்தில் மீண்டும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பது குறித்து பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதில் பாதிக்கும் அதிகமான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க விருப்பம் தெரிவித்ததை அடுத்து, திட்டமிட்டபடியே வரும் நவம்பர் 16-ம் தேதி முதல் ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வத் தகவலை இன்னும் ஓரிரு நாட்களில் பள்ளி கல்வித்துறை அறிவிக்க உள்ளது.
ALSO READ | தமிழகத்தில் பள்ளிகள் எப்பொழுது திறக்கப்படும்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR