தமிழகத்திற்கு 40.43 TMC தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு!

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 40.43 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

Last Updated : Jun 26, 2019, 08:49 AM IST
தமிழகத்திற்கு 40.43 TMC தண்ணீர் வழங்க கர்நாடக அரசுக்கு உத்தரவு! title=

தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 40.43 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என கர்நாடக மாநில அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

காவிரி மேலாண்மை ஆணையத்தின் நான்காவது கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், ஜூன் மாதத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட 9.19 டிஎம்சி நீரை இந்த மாத இறுதிக்குள்ளும், ஜூலை மாதத்திற்கான 31.24 டிஎம்சி நீரை அடுத்த மாத இறுதிக்குள்ளும் முழுமையாக திறக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேகதாது அணைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு, மேகதாது அணை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அது தொடர்பாக இந்த கூட்டத்திலும், இனி வரும் கூட்டத்திலும் விவாதிக்கக்கூடாது எனவும் வலியுறுத்தப்பட்டது. காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் தலைமையிடம் பெங்களூரு என்பதால் இனி வரும் கூட்டங்கள் பெங்களூருவில்தான் நடக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து ஜூன், ஜூலை மாதத்திற்கான தண்ணீரை திறந்து விட வேண்டுமென கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மழைப்பொழிவு, நீர்வரத்தைப் பொறுத்து தமிழகத்திற்கு சேர வேண்டிய தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டுமென ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

Trending News