சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குள் தண்டனை பெற்று வரும் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மேலும் கைதிக்கான உடையை அணியாமல் சாதரான உடையில் சசிகலா வலம் வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் ரூபா ஒப்படைத்துள்ள புதிய வீடியோ ஆதாரத்தில், சசிகலாவும், இளவரசியும் தங்களின் சொந்த உடையில், பரப்பன அக்ரஹார சிறையின் பிரதான நுழைவாயில் வழியாக சிறைக்குள் வருவது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது.
கையில் ஷாப்பிங் பையுடன், சுடிதார் அணிந்து சசிகலா வரும் காட்சி இடம்பெற்றுள்ளது.சசிகலாவுக்கு சிறையில் சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளதற்கான ஆதாரம் என கூறி ரூபா, இந்த வீடியோவை அளித்துள்ளார்.
மேலும் பெண்கள் சிறைக்குள் ஆண் காவலர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் பிரதான நுழைவாயிலிலேயே காவலுக்கு நிறுத்தப்படுவார்கள். இந்த வீடியோவில் சசிகலா கடந்து செல்லும் பொழுது, ஆண் கைதி ஒருவர் சிறை உடையில் இருப்பதும் பதிவாகி உள்ளது.
#WATCH CCTV footage given to ACB by then DIG(Prisons) D Roopa, alleges Sasikala entering jail in civilian clothes in presence of male guards pic.twitter.com/2eUJfbEUjD
— ANI (@ANI) August 21, 2017